மேலும் அறிய
Advertisement
Headlines Today : நாளை சந்திரகிரகணம்.. பா.ஜனதா 4 இடங்களில் வெற்றி.. அரையிறுதியில் இந்தியா.. இன்னும் பல!
Headlines Today : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச்செய்திகளாக காணலாம்.
தமிழ்நாடு :
- வடகிழக்கு பருவமழையை சமாளிக்க தமிழகம் முழுவதும் தயார் நிலையில் 5,093 நிவாரண முகாம்கள் : பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல்
- தமிழகத்தில் நாளை முழு சந்திரக்கிரகணம் - பொதுமக்கள் மாலையில் பார்க்கலாம்
- தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் தகவல்
- மேட்டூர் அணையின் நீர் வரத்து 26,000 கன அடியில் இருந்து 18,000 கன அடியாக குறைவு
- அதிமுக உடையவில்லை ஒன்றாக தான் இருக்கிறது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
- சென்னையில் இருந்து புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் பெட்டிகள் கழன்றது - டிரைவரின் சாமர்த்தியதால் பயணிகள் உயிர் தப்பினர்
- சென்னையில் மின்சாரம் பாய்ந்து கணவன் - மனைவு உயிரிழப்பு
- சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் முறைகேடு : பொன். மாணிக்கவேல் மீது சிபிஐ வழக்கு
இந்தியா:
- திருப்பதி ஏழுமலையானுக்கு வரும் காணிக்கை தங்கம், மாநில அரசிடம் அடகு வைக்கப்படுவதாக பகிரப்படும் தகவல்கள் ஏற்புடையதல்ல - திருப்பதி தேவஸ்தான சிஇஓ
- இலவசங்கள் நாட்டை கெடுக்கின்றன என்று சொல்லிவிட்டு இமாச்சல் தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் மாணவிகளுக்கு இலவச சைக்கிள், ஸ்கூட்டி அறிவித்துள்ள பாஜகவை டி.ஆர்.பி.ராஜா சாடியுள்ளார்.
- நேற்று பீகாரில் இரண்டு தொகுதிகளிலும், மகாராஷ்டிரா, ஹரியானா, தெலங்கானா, உத்தரபிரதேசம் மற்றும் ஒடிசாவில் தலா ஒரு தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
- புற்றுநோயை தடுத்தல் மற்றும் ஆரம்ப நிலையிலேயே கண்டறிதல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தேசிய புற்றுநோய் விழிப்புணர்வு தினம் நவம்பர் 7 ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.
- 7 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் முடிவுகள்: பா.ஜனதா 4 இடங்களில் அமோக வெற்றி
- குஜராத்தின் பெருமையை சிதைக்க முயன்ற சக்திகள் தேர்தலில் வீழ்த்தப்படுவார்கள்- பிரதமர் மோடி
உலகம்:
- அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியா ( Philadelphia )மாகாணத்தில் இரவு நேர கேளிக்கை நிகழ்ச்சியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
- கிழக்கு ஆப்பிரிக்க நாடான டான்சானியாவின் வடமேற்கு நகரமான புகோபா விமான நிலையத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தண்ணீரில் விழுந்து விமானம் விபத்துக்குள்ளானதில் 43 பேர் மாயம்
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 61.72 கோடியாக உயர்வு
விளையாட்டு:
- இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகா பாலியல் வன்கொடுமை வழக்கில் சிட்னியில் கைது செய்யப்பட்டார்.
- நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி தோல்வியடைந்ததால், இந்திய அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.
- வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி குரூப் பி பிரிவில் இந்தியாவுடன் இணைந்து அரையிறுதிக்கு சென்றது.
- விளையாட்டுத் துறையின் உயரிய விருதான அர்ஜுனா விருதுக்கு தமிழகத்தைச் சேர்ந்த இளம் செஸ் வீரர் பிரக்ஞானந்தா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
- பாரா பேட்மிண்டன் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை தங்கம் வென்றார்.
- டி20 உலககோப்பையில் சூப்பர் 12 சுற்றின் கடைசி ஆட்டத்தில் இந்தியா 71 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே அணியை வீழ்த்தியது
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion