Breaking LIVE: பள்ளி பாடத்தில் பகவத் கீதை பாடம் கட்டாயம் - குஜராத் அரசு அறிவிப்பு
Breaking Live Blog : இன்று நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே விரைவுச்செய்திகளாக காணலாம்.
LIVE
Background
தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதியில் உள்ள தெற்கு அந்தமான் பகுதியில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால் மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
பள்ளி பாடத்தில் பகவத் கீதை பாடம் கட்டாயம் - குஜராத் அரசு அறிவிப்பு
6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பாட புத்தகத்தில் பகவத் கீதை பாடம் கட்டாயம் இடம் பெறும் என குஜராத் அரசு அறிவித்திருக்கிறது
தமிழகத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 70 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 20 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் ஒருவர் உயிரிழந்திருப்பதாக மருத்துவத்துறை தெரிவித்துள்ளது
ஹஜ் பயணம்: சென்னையிலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்
ஹஜ் பயணம்: மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்விக்கு, ஹஜ் பயணத்துக்கு சென்னையிலிருந்து செல்ல அனுமதிக்கவேண்டும் முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்
தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 24 மணிநேரத்தில் தமிழ்நாட்டில் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் எனவும், 18 ம் தேதி (நாளை) மட்டும் தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வறண்ட நிலை காணப்படும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னையில் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் உயர்வு - சிஎம்டிஏ
சென்னையில் அடுக்குமாடி கட்டத்துக்கான கட்டமைப்பு மேம்பாட்டு கட்டணம் சதுர மீட்டருக்கு ரூ.20 உயர்த்தப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கான கட்டணத்தை ரூ.198லிருந்து ரூ.218 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது என்று சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் தெரிவித்துள்ளது.