மேலும் அறிய
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
7 AM Headlines: கடந்த 24 மணிநேரத்தில் உங்களை சுற்றி என்ன நடந்தது..? இதோ ஏபிபி-யின் தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- டெல்டா பகுதிகளில் நிலக்கரி சுரங்க திட்டம் கூடாது - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் கடிதம்
- கலாஷேத்ரா பாலியல் புகாரை விசாரிக்க விசாரணை குழு அமைப்பி : பேராசிரியர் மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச ஆடியோவால் பரபரப்பு
- மாவட்ட செயலாளர் கூட்டத்தை தொடர்ந்து அதிமுக செயற்குழு கூட்டமும் திடீர் ரத்து; எடப்பாடி பழனிசாமி அறிவிப்பால் நிர்வாகிகள், தொண்டர்கள் குழப்பம்
- தமிழ்நாடு, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு தேர்வு நாளை தொடக்கம்: 9.67 லட்சம் பேர் பங்கேற்கின்றனர்.
- தமிழநாட்டில் 90% பேருக்கு எதிர்ப்பு சக்தி; கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
- தி.மு.க. அரசு பொறுப்பேற்ற காலங்களில் மகளிருக்கான பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- 6வது முறையாக தனியார் பால் தயிர் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளதால் பால் முகவர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
- வேளாண் மண்டலத்தில் எரிவாயு திட்டங்களை செயல்படுத்த முடியுமா என்பதை மாநில அரசு தெளிவுபடுத்த வேண்டும் - வானதி சீனிவாசன்
- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் பழுப்பு நிலக்கரி எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது - உதயநிதி ஸ்டாலின்
- 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதிய 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்றுடன் நிறைவு பெற்றது.
இந்தியா:
- இந்தியாவின் பொருளாதாரம் 6.3 சதவீதமான குறையும் - உலக வங்கி கணிப்பு
- அருணாச்சலில் 11 இடங்களுக்கு புதிய பெயர்; சீனாவுக்கு இந்தியா கடும் கண்டனம்
- பிரதமர் மோடி 8ம் தேதி சென்னை வருகை: சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் விமான நிலையத்தில் ஆய்வு
- கொரோனா தொற்று அதிகரிப்பதால் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் : பொது சுகாதாரத்துறை இயக்குனர் அறிவுறுத்தல்
- கர்நாடகாவில் வரும் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க.வே பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
- கேரள ரயிலில் பயணிகள் மீது தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளி உத்தரப்பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இருந்து மொகலாயர்கள் பகுதி நீக்கப்படும் என்று என்சிஇஆர்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
உலகம்:
- சோமாலியாவில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
- கொழும்புவில் இந்திய, இலங்கை கடற்படைகளின் கூட்டு போர்ப்பயிற்சி தொடங்கியது.
- ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் நியூயார்க் நீதிமன்றத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
- பிலிப்பைன்சில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.2 ஆக பதிவாகியுள்ளது.
விளையாட்டு:
- ஊக்கமருந்து பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டு 4 ஆண்டுகள் போட்டிகளில் சஞ்சிதா பங்கு பெற தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையினை தேசிய ஊக்கமருந்து தடுப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
- ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு எதிரான் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது.
- இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில் விளையாடமாட்டார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
- ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று ராஜஸ்தான், பஞ்சாப் அணிகள் இன்று பலப்பரீட்சை.
- ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய நிலையில் வில்லியம்சன் நேற்று தாயகம் திரும்பினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
சேலம்
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion