மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அரசியல் முதல் விளையாட்டு வரை.. இதுவரையிலான முக்கிய நிகழ்வுகள்.. 7 மணி தலைப்பு செய்திகள்..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு திமுக வரவேற்பு - தமிழ்நாட்டை வஞ்சிக்கமாட்டோம் என உறுதி தருமாறு முதலமைச்சர் ஸ்டாலின் வலியுறுத்தல்
- சரியானதை ஆதரிப்பதும், விமர்சனம் இருந்தால் சுட்டிக்காட்டுவதுதான் பத்திரிகை தர்மம் என புத்தகம் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
- பாஜக எனும் பாம்பை ஒழிக்க வேண்டும் என்றால், அதிமுக எனும் குப்பையை அகற்ற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்
- பாஜக பற்றியோ, அக்கட்சி தலைவர்கள் பற்றியோ விமர்சிக்கக்கூடாது என அதிமுகவினருக்கு எடப்பாடி பழனிசாமி வாய்மொழி உத்தரவிட்டதாக தகவல்
- தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் அக்டோபர் மாதம் 9ஆம் தேதி கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
- துணைவேந்தர் தேர்ந்தெடுக்க அமைக்கப்பட்டிருந்த ஆளுநரின் தேர்வுக்குழுவை மாற்றம் - புதிய குழுவை அமைத்த தமிழ்நாடு அரசு
- தமிழ்நாடு முழுவதும் அமைதியாக நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் - பாதுகாப்பான முறையில் நீர்நிலைகளில் கரைப்பு
- அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு மீண்டும் தள்ளுபடி - நீதிமன்ற காவல் தொடர்கிறது
- சென்னையில் தொழிலதிபர்களுக்கு சொந்தமான 30-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை
- ஆளுநரை திரும்பப் பெறக்கோரி 50 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுக்களை குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் ஒப்படைத்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ
- வேலூரில் தொடரும் மழை காரணமாக தொடக்கப் பள்ளிகளுக்கு விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
இந்தியா:
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றம் - பலரும் வரவேற்பு
- 2029 ஆம் ஆண்டுக்கு பிறகு மகளிர் இடஒதுக்கீடு நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் அமித்ஷா தகவல்
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான விவாதம் இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறுகிறது
- கனடாவில் இந்திய எதிர்ப்பாளர்கள் உள்ள இடங்களுக்கு இந்திய மக்கள் பயணிக்க வேண்டாம் என மத்திய அரசு எச்சரிக்கை
- காவிரியில் இருந்து உரிய நீரை திறந்துவிட கோரும் தமிழ்நாடு அரசின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
- ரயில்களில் குழந்தைகளுக்கு தனி படுக்கை முழு கட்டணம் - கடந்த 7 ஆண்டுகளில் ரூ.2,800 கோடி கூடுதல் வருவாய் கிடைத்துள்ளதாக தகவல்
- மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மசோதாவிற்கு காங்கிரஸ் முழு ஆதரவு தருவதாக மக்களவையில் ராகுல் காந்தி அறிவிப்பு
- சமூக வலைதளங்களை பயன்படுத்த வயது வரம்பு விதிக்கப்பட்ட வேண்டும் என கர்நாடகா உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து
உலகம்:
- சீனாவில் இருவேறு இடங்களில் சூறாவளி தாக்குதல் - 10 பேர் உயிரிழப்பு
- சிங்கப்பூர் ஈஸ்வரன் எம்.பி. பதவி ரத்து மசோதா மீது நாடாளுமன்றத்தில் நடைபெற்ற ரகசிய வாக்கெடுப்பு தோல்வி
- அமெரிக்காவில் ஆன்லைன் வழியாக ரூ.10 கோடி மோசடி செய்த 2 இந்தியர்களுக்கு 41 மாதம் சிறை தண்டனை விதிப்பு
- ஐ.நா. சபையில் காஷ்மீர் பிரச்சனையை மீண்டும் எழுப்பிய துருக்கி அதிபர் - இந்தியா கடும் கண்டனம்
- இந்தியாவில் வாழும் கனடா மக்கள் கவனமாக இருக்குமாறு அந்நாட்டு அரசு எச்சரிக்கை
விளையாட்டு:
- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகவும் ஆடுகளங்களை அமைக்க ஐ.சி.சி. அறிவுறுத்தல்
- ஐசிசி பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேற்றம்
- ஆசிய விளையாட்டு தொடக்க விழா அணிவகுப்பில் ஹர்மன்பிரீத் சிங், லவ்லினா தேசிய கொடி ஏந்தி செல்வார்கள் என அறிவிப்பு
- ஆசிய கோப்பை கால்பந்து போட்டித் தொடரில் இந்தியா-வங்கதேசம் அணிகள் இன்று மோதல்
- நடப்பாண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டிக்கான பாடல் வெளியீடு - ரசிகர்கள் கொண்டாட்டம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion