மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: அடுத்தடுத்து அதிரடி..! என்னாச்சுன்னு தெரியனுமா..? காலை 7 மணி தலைப்பு செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- மத்திய ஆயுதப்படை தேர்வு தமிழில் நடத்தப்படும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிவிப்பு - முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோரின் கோரிக்கை ஏற்பு
- தமிழ்நாட்டில் ஒரே நாளில் 500-க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா: தொற்று உறுதியாகும் விகிதமும் உயர்வு
- அண்ணாமலை முதிர்ச்சியான அரசியல்வாதி அல்ல என எடப்பாடி பழனிசாமி விமர்சனம்: தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ள பேசுவதற்கெல்லாம் பதிலளிக்க முடியாது என காட்டம்
- தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இன்று ஆர்எஸ்எஸ் அமைப்பினர் பேரணி, அனைத்து மாவட்டங்களிலும் காவல்துறை தீவிர கண்காணிப்பு
- தமிழ்நாட்டில் தொடங்கியது மீன்பிடி தடைகாலம்.. கிடுகிடுவென உயர்ந்த மீன்களின் விலை
- கிருஷ்ணகிரியில் காதல் திருமணம் செய்த மகனை ஆணவக்கொலை செய்த தந்தை கைது
- சிவகாசி மாவட்டம் மாரனேரி பட்டாசு ஆலையில் நடந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்: காயமடைந்தோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிதியுதவி
இந்தியா:
- உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடியும், முன்னாள் எம்.பியுமான அதிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டிருந்த போது மர்மநபர்களால் சுட்டுக் கொலை: மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு அமல்
- பாஜகவில் இருந்து விலகுவதாக கர்நாடகா முன்னாள் முதலமைச்சர் ஜெகதிஷ் ஷெட்டர் அறிவிப்பு: கட்சி மேலிடம் நடத்திய பலகட்ட பேச்சுவார்த்தை தோல்வி
- கர்நாடகாவின் கோலார் தொகுதியில் போட்டியிட சித்தராமையாவுக்கு வாய்ப்பு மறுப்பு, இரண்டு தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்காததால் தலைமை மீது அதிருப்தி என தகவல்
- டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலை விசாரணைக்கு அழைத்த சிபிஐ: நாளை சட்டசபை சிறப்பு கூட்டம்
- பி.எஸ்.எல்.வி. சி55 ராக்கெட்வரும் 22ம் தேதி விண்ணில் பாய்கிறது, சிங்கப்பூருக்கு சொந்தமான செயற்கைகோளை சுமந்து செல்கிறது
- உத்தரபிரதேசத்தில் டிராக்டர் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 11 பேர் பலி
- பீகாரில் விஷ சாராயம் குடித்து 14 பேர் பலி, ஏராளமானோருக்கு தீவிர சிகிச்சை
உலகம்:
- அமெரிக்கா ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக ஜோ பைடன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்
- சூடானில் ராணுவத்திற்கும், துணை ராணுவத்திற்கும் இடையே மோதல், அந்நாட்டில் உள்ள இந்தியர்கள் வெளியே வரவேண்டாம் என இந்திய தூதரகம் வேண்டுகோள்
- ஜப்பான் பிரதமர் மீதான கொலை முயற்சிக்கு பிரதமர் மோடி கண்டனம்
- இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீசிய நபருக்கு நூதன தண்டனை: 100 மணிநேரம் ஊதியம் பெறாத சமூகப் பணிகளை செய்ய நீதிமன்றம் உத்தரவு
- சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி மரணம்
- டெல்லி புறப்பட்ட லுப்தான்சா விமானம் தொழில்நுட்பக்கோளாறால் புறப்பட்ட இடத்திற்கே மீண்டும் திரும்பியது
விளையாட்டு:
- ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வெற்றி
- ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் பெங்களூருவிடம் வீழ்ந்து தொடரின் 5வது தோல்வியை பெற்றது டெல்லி அணி
- ஐபிஎல் தொடரின் இன்றைய முதல் லீக் போட்டியில் வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதல்
- ஐபிஎல் தொடரின் இன்றைய இரண்டாவது லீக் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதல்.. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்க தீவிரம்
- அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மீண்டும் பயிற்சியை தொடங்கினார் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா
- மான்டேகார்லோ டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், ரூப்லேவ் - ருனே இன்று மோதல்
- பார்சிலோனா ஓபன் டென்னிஸ்: நட்சத்திர வீரர் நடால் விலகல்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion