மேலும் அறிய
Advertisement
7 AM Headlines: கடந்த 24 மணி நேரத்தின் பல்வேறு முக்கிய நிகழ்வுகளின் தொகுப்பாக.. 7 மணி தலைப்புச் செய்திகள் இதோ..!
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு:
- திமுகவிற்கு கொள்கையே முக்கியம் - ஆட்சியை பற்றி கவலை இல்லை என அமைச்சர் உதயநிதி பேச்சு
- சென்னையில் இன்று கூடுகிறது அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவது குறித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை
- சிறுவனாக இருந்தபோது ஆசிரியர்களுக்கு கால்களை பிடித்துவிட்டதாக ஆளுநர் ரவி பேச்சு - தற்போதைய ஆசிரியர்கள் ஊதியத்திற்காக மட்டுமே வேலை செய்வதாகவும் விமர்சனம்
- அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமின் மனு நாளை விசாரணை - சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் விசாரிக்கிறது
- கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை கடும் வீழ்ச்சி - கிலோ 9 ரூபாய்க்கு விற்பனை
- சந்திரபாபு நாயுடுவின் கைதால் பாதிக்கப்பட்ட ஆந்திராவில் இருந்து சென்னைக்கான பேருந்து போக்குவரத்து சீரானது
- கோவையில் இளைஞரிடம் வாடகை வாகனத்த வாங்கி மோசடி - அதிமுக நிர்வாகி ஜான்சன் என்பவர் கைது
- திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆவணி திருவிழா - 6ம் நாள் நிகழ்ச்சி கோலாகலம்
இந்தியா:
- ஜி20 மாநாட்டில் 37 பக்கங்கள் கொண்ட டெல்லி பிரகடனம் நிறைவேற்றம் - நாடுகளுக்கு இடையேயான எல்லைப் பிரச்னைகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என தீர்மானம்
- ஜி20 அமைப்பில் 21வது நிரந்தர உறுப்பு நாடானது ஆப்ரிக்கா யூனியன் - இந்தியாவின் முன்மொழிவை ஏற்ற உறுப்பு நாடுகள்
- ஜி20 மாநாட்டில் பங்கேற்ற உலக தலைவர்களுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் வழங்கப்பட்ட இரவு விருந்து - பாரம்பரிய உடைகளில் பங்கேற்ற தலைவர்கள்
- ஜி20 மாநாட்டின் கொள்கைகளுக்கு எதிராக பிரதமர் மோடி செயல்படுவதாக காங்கிரஸ் காட்டம் - ஒரு மனிதர், ஒரு அரசு, ஒரு வணிகம் என்பதே பிரதமரின் நம்பிக்கை என விமர்சனம்
- ஆதித்யா எல்1 விண்கலத்தின் புவி சுற்றுவட்டப்பாத 3வது முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டது - கிஸ்ரோ தகவல்
- ஆந்திராவில் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு - 5 மணி நேர சிஐடி விசாரணைக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்
- சந்திரபாபுவை சந்திக்க அனுமதி மறுத்த காவல்துறை - சாலையில் படுத்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட நடிகர் பவன் கல்யாண்
உலகம்:
- மொராக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 2000 ஆயிரத்தை கடந்துள்ளது - படுகாயமடைந்த 1,800-க்கும் அதிகமானோருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிசை
- உலக வங்கி மூலம் குறைந்த வருவாய் கொண்ட நாடுகளுக்கு உதவ வேண்டும் - ஜி20 மாநாட்டில் அமெரிக்க அதிபர் பைடன் வலியுறுத்தல்
- சூடான் உள்நாட்டுப் போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் - ஐ.நா. அறிக்கை
- கிரீஸ் நாட்டில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு - 93 ஆண்டுகளில் இல்லாத அளவிலான கடும் பாதிப்பு
- சீனாவில் அரசு ஊழியர்கள் ஐபோன் பயன்படுத்த தடை
விளையாட்டு:
- ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 4 சுற்று - இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரிட்சை
- ஆசியக்கோப்பை சூப்பர் 4 சுற்று - நேற்றைய போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தியது இலங்கை
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்
- லபுசக்னே, வார்னர் அதிரடி சதம் - தென்னாப்ரிக்காவிற்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அபார வெற்றி
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
கிரிக்கெட்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion