மும்பை: உணவகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து: காரணம் என்ன? யாருக்கு என்னாச்சு?
மும்பை முலுந்த் மேற்கு பகுதியில் இருக்கிறது ராம் ரத்தன் திரிவேணி மார்க்.
மும்பையில் இன்று பிற்பகல் உணவகம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் காயமடைந்தனர். மும்பை முலுந்த் மேற்கு பகுதியில் இருக்கிறது ராம் ரத்தன் திரிவேணி மார்க். இந்தப் பகுதியில் மிகவும் பிரபலமான பார்பிக்யூ உணவகம் கவ்பாய் உணவகம். இந்த உணவகத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
தீ விபத்து குறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் பெரிய ஆபத்து தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை.
தீக்காயம் முதலுதவி: சில டிப்ஸ்
தீக்காயம் பட்ட இடம் முகம் என்றால், உடனே முகத்தைத் தண்ணீரில் கழுவ வேண்டும், கை என்றால், அருகிலுள்ள பைப் தண்ணீரில் கையை நனைக்க வேண்டும். இல்லாவிட்டால் ஒரு பாத்திரத்தில் தண்ணீரை நிரப்பி அதில் சூடு பட்ட இடத்தை அடிக்கடி நனைக்க வேண்டும். காயம்பட்ட இடத்தை குறைந்தபட்சமாக 15 நிமிடங்களாவது தண்ணீரில் நனைக்க வேண்டும்.
தீ காயங்களில் மூன்று வகை உண்டு. முதல் டிகிரி, மேல் உள்ள தோலை மட்டும் லேசாகப் பாதிப்படையச் செய்து இருக்கும். இரண்டாவது டிகிரி தீக்காயம் என்பது மேலும் சில தோலின் பகுதிகளைக் காயத்திற்கு உண்டாகி இருக்கும். மூன்றாம் டிகிரி என்பது தோல்களின் அனைத்து பகுதிகளையும் காயத்திற்கு உண்டாகியிருக்கும்.நான் நான்காம் டிகிரி என்பது தோல் மட்டுமில்லாமல் எலும்பு தசை வரை சென்று பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். இதில் மூன்று மற்றும் நான்காம் டிகிரி காயங்களை நாம் சரி செய்ய இயலாது. மருத்துவமனையில்தான் அதை சரி செய்ய முடியும் அது ஒரு அவசரக் கால மருத்துவச் சிகிச்சைக்கு உட்பட்டது.
தீக்காயம் பட்ட அடுத்த நிமிடமே நாம் செய்ய வேண்டிய முதல் காரியம், காயம்பட்ட இடத்தை குறைந்தபட்சம் இருபது நிமிடமாவது குளிர்ந்த நீரில் வைத்திருக்க வேண்டும். இது முக்கியமான ஒரு செய்கை ஆகும். காயம்பட்ட இடம் முற்றிலும் ஆறியவுடன் 20 நிமிடத்திற்குப் பிறகு காயம் பட்ட இடத்தை லேசாகச் சோப்பு தண்ணீர் வைத்துக் கழுவி விட வேண்டும். நோய் தோற்று வராமல் இருக்க நாம் இப்படிச் செய்கிறோம்.
லேசான தீக்காயம் என்றால் முதலுதவியாக ஆன்ட்டிபயாட்டிக் ஆயில்மென்ட் தேய்க்கலாம். அதுவும் காயத்தை குளிர்ந்த நீரால் சுத்தம் செய்த பின்னர் தேய்க்கலாம். ஆன்ட்டிபயாட்டிக் ஆயின்மென்ட் தீக்காயம் பட்ட இடங்களில் புண் பெரிதாகாமல் காத்துக் கொள்ள உதவுகிறது. ஆன்ட்டிபயாட்டிக் ஆயில்மென்ட் முக்கியமாக உங்களது முதல் உதவிப் பெட்டியில் இருக்க வேண்டிய முக்கியமான பொருளாகும். தீக்காயங்களுக்கு வலி நிவாரணி எடுக்கும் முன்பு மருத்துவரை அணுகுவது அவசியம்.