மேலும் அறிய

Odisha Train Accident: ஒடிஷா ரயில் விபத்து.. மீட்பு பணிகள் நிறைவு.. ரயில்வே செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ தகவல்..

ஒடிஷா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார்.

ஒடிஷா ரயில் விபத்தில் மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாக ரயில்வே செய்தித் தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். விபத்து நடந்த வழிதடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கோர விபத்து:

கொல்கத்தாவில் உள்ள ஷாலிமர் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று இரவு சென்னை நோக்கி கோரமண்டல் எக்ஸ்பிரஸ் கிளம்பியது. இந்த ரயில் ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் உள்ள பஹானாகா பஜார் நிலையம் அருகே வந்தபோது தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் 10-12 பெட்டிகள் தடம் புரண்டு தண்டவாளத்தில் இருந்து விலகி கவிழ்ந்தன இந்த விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அடுத்த சிறிது நேரத்தில் எதிர் தண்டவாளத்தில் வந்துக் கொண்டிருந்த யஸ்வந்த்பூரில் இருந்து ஹவுரா செல்லும் மற்றொரு ரயில் தடம் புரண்ட பெட்டிகள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இவ்வாறு தடம் புரண்ட ரயில் பெட்டிகள் அருகே நின்று கொண்டிருந்த சரக்கு ரயிலின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

மீட்பு பணிகள்:

இந்த கோர விபத்தில் 200 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அவர்களது உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. தேசிய பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 7 குழுக்கள், மாநில பேரிடர் மீட்பு படையை சேர்ந்த 5 குழுக்கள், தீயணைப்பு பிரிவை சேர்ந்த 24 குழுக்கள், உள்ளூர் காவல்துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் என ஏராளமானோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மாநில முதலமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், விபத்து நடத்த இடத்துக்கு பிரதமர் மோடி இன்று செல்வதாக தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக, இந்த விபத்து தொடர்பாக பிரதமர்  நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவது, அவசர மருத்துவ சிகிச்சை உள்ளிட்டவை குறித்து அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார்.

கவாச் பாதுகாப்பு அம்சம்:

இந்நிலையில் ஒடிஷா ரயில் விபத்து மீட்பு பணிகள் நிறைவடைந்து சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதாக ரயில்வே செய்தி தொடர்பாளர் அமிதாப் ஷர்மா தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் விபத்து நடந்த வழிதடத்தில் ‘கவாச்’ பாதுகாப்பு அம்சம் நடைமுறையில் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ளார். கவாச் பாதுகாப்பு அம்சம் என்பது இரு ரயில்கள் மோதிக்கொள்ளாமல் இருக்க அமைக்கப்படும் தடுப்பு கருவியாகும். இந்த கருவியானது இரண்டு ரயில்கள் மோதுவது போல் வந்தால் சுமார் 380 மீட்டர் தொலைவிலேயே வண்டியை நிறுத்திவிடும். மேலும் சிவப்பு சமிக்ஞை விளக்கு இருந்தால் ஓட்டுநர் பிரேக்கை பயன்படுத்தாமலேயே, என்ஜின் செயல்பாட்டை நிறுத்திவிடும். அதுமட்டுமல்லாமல் இணைப்பு பாதைகள் வரும் போது ரயில் வண்டியின் வேகத்தை மணிக்கு 60 கி.மீ. என்பதிலிருந்து மணிக்கு 30 கி.மீட்டராக கவாச் கருவி தானாகவே குறைக்கும்.     

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget