புதுச்சேரி : ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை; தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என காவல்துறை எச்சரிக்கை
ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுச்சேரி ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். தொடர் குற்றங்களில் ஈடுபட்டால் குண்டர் சட்டம் பாயும் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. புதுவை காவல்துறையில் ஆபரேசன் திரிசூலம் என்ற பெயரில் ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன்படி புதுவையில் உள்ள ரவுடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், வெளி மாநில குற்றவாளிகள் யாரேனும் புதுவையில் பதுங்கியுள்ளனரா? என்பதும் அடிக்கடி சோதனைகள் மூலம் ஆராயப்பட்டு வருகிறது.
இதற்காக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா மேற்பார்வையில் போலீஸ் சூப்பிரண்டுகள் சுவேதா, சுபம் சுந்தர் கோஷ், ரவிக்குமார் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த குழுக்களில் சிறப்பு அதிரடிப்படை போலீசார் மற்றும் கிழக்கு, தெற்கு பகுதிகளை சேர்ந்த போலீசாரும் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவானது வைத்திக்குப்பம், குருசுக்குப்பம், டி.வி.நகர், சின்னையாபுரம் பகுதிகளில் உள்ள ரவுடிகளின் வீடுகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது போலீஸ் மோப்ப நாய், வெடி குண்டு பிரிவுகளை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.
Jayakumar Released | வெளியே வந்த ஜெயக்குமார்! தூக்கிக் கொண்டாடிய அதிமுகவினர்!
அப்போது ரவுடிகளை பிடித்து போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் அவர்களது வீட்டில் ஆயுதங்கள், வெடி குண்டுகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தும் தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் ஆயுதங்கள் எதுவும் சிக்கவில்லை.
MK Stalin meets ukraine students | தமிழகம் வந்த உக்ரைன் மாணவர்கள்.. நேரில் சென்று வரவேற்ற முதல்வர்!
இது போன்ற சோதனைகள் வருங்காலங்களில் அடிக்கடி நடத்தப்படும் என்றும் தடை செய்யப்பட்ட பொருட்களான கஞ்சா, லாட்டரி சீட்டு விற்பனை மற்றும் பிற குற்றங்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் துறை எச்சரித்துள்ளது. மேலும் வழக்கமான குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளின் மீது குண்டர் சட்டம் பாயும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு பொறுப்பு தீபிகா தலைமையில் போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், இன்ஸ்பெக்டர்கள் முத்துக்குமரன், சுரேஷ்பாபு மற்றும் போலீசார் அரியாங்குப்பம் பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்