மேலும் அறிய

ISRO NVS-1: இன்னும் சற்று நேரத்தில் விண்ணில் பாய்கிறது ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட்..! சிறப்பம்சம் என்னென்ன?

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இன்று ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் மூலம் என்.வி.எஸ்-1 என்ற வழிகாட்டு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்த உள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரியோட்டாவில் இருந்து இன்று என்.வி.எஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் ராக்கெட்.  இதற்கான கவுண்டவுன் நேற்று தொடங்கிய நிலையில், இன்று காலை 10.42 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் ஏவப்படுகிறது.

ஜி.எஸ்.எல்.வி.எப் 12 ராக்கெட்

சாலை, கடல் மற்றும் விமான போக்குவரத்துக்கு வழிகாட்டுவதற்காக ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். பிரிவில் 1ஏ, 1பி என மொத்தம் 7 செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த செயற்கைகோள்கள் பி.எஸ்.எல்.வி. சி-22, பி.எஸ்.எல்.வி. சி-24, பி.எஸ்.எல்.வி. சி-26, பி.எஸ்.எல்.வி. சி-27, பி.எஸ்.எல்.வி. சி-31, பி.எஸ்.எல்.வி. சி-32 உள்ளிட்ட ராக்கெட்டுகள் மூலம் ஜூலை 2013-ம் ஆண்டு, ஏப்ரல், அக்டோபர் 2014-ம் ஆண்டு, மார்ச் 2015-ம் ஆண்டு , ஜனவரி 2016-ம் ஆண்டு மற்றும் மார்ச் உள்ளிட்ட ஆண்டுகளில் விண்ணில் ஏவப்பட்டது.

இதில் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்.-1-ஜி என்பது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். விண்வெளிப் பிரிவில் உள்ள 7 செயற்கைகோள்களில் 7-வது செயற்கைகோளாகும். இந்த செயற்கைக்கோள் 2016 ஆம் ஆண்டு விண்ணில் செலுத்தப்பட்டது. தற்போது அதன் ஆயுட்காலம் முடிவடையும் நிலையில், அதற்கு மாற்றாக வேறு செயற்கைக்கோளை இஸ்ரோ விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இது என்.வி.எஸ் என பெயரிடப்பட்டுள்ளது.  இது அடுத்த தலைமுறை செயற்கைக்கோளை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.எப்-12 ராக்கெட் மூலம் செலுத்தப்பட உள்ளது.

சிறப்பம்சம் என்ன?

என்விஎஸ்-01 செயற்கைக் கோள் 2,232 கிலோ எடை கொண்டது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகள். இதில் எல்1, எல்5 மற்றும் எஸ்-பேண்ட் டிரான்ஸ்பாண்டர் உட்பட பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணு கடிகாரமும் முதல் முறையாக இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது மற்ற செயற்கைக்கோள்களுடன் சேர்ந்து தரை, கடல், வான்வழி போக்குவரத்தை கண்காணிக்கும். பேரிடர் காலங்களில் துல்லியமான தகவல்களை தெரிவிக்கும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 

NavIC ஆனது ஏழு செயற்கைக்கோள்கள் மற்றும் 24 மணி நேரம் இயங்கும் தரை நிலையங்களின் வலையமைப்புடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. விண்மீன் கூட்டத்தின் மூன்று செயற்கைக்கோள்கள் புவிசார் சுற்றுப்பாதையிலும், நான்கு செயற்கைக்கோள்கள் புவி ஒத்திசைவு சுற்றுப்பாதையிலும் ( inclined geosynchronous orbit) நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

இதே திட்டத்துடன் இஸ்ரோ தனது முதல் சூரிய ஆய்வு திட்டமான ஆதித்யாவின் முதல் சோதனை திட்டம் ஆதித்யா-எல் 1 இந்த ஆண்டில் மூன்றாம் காலாண்டில் விண்ணில் செலுத்தும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டுக்கான 2 சோதனை ராக்கெட்டுகளில் ஒன்று இந்த ஆண்டு பிற்பகுதியில் விண்ணில் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.

மேலும் படிக்க

New Parliament: புதிய நாடாளுமன்றத்தில் தமிழ்; தமிழகத்திற்கும், தமிழர்களுக்கும் கிடைத்த பெருமை - வானதி சீனிவாசன்

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK vs VCK Flag issue | ”எங்க கொடிதான் பறக்கணும்”தவெக- விசிக கடும் மோதல் களத்துக்கு வந்த போலீசார்Vijay Thiruma meeting :”ஒரே மேடையில் திருமா, விஜய்”ஆதவ் அர்ஜுனா SKETCH!திமுகவை அதிரவைத்த உளவுத்துறை!Tirupati Laddu Row BR Naidu : ”இந்துவா இருந்தால் தான் வேலை..இல்லனா வெளியே போ!” தேவஸ்தானம் பகீர்!Police Passed away | பேனரால் நிகழ்ந்த விபரீதம்பரிதாபமாக இறந்த காவலர் சோகத்தில் மூழ்கிய கிராமம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
மொத்தமாக மாறும் சென்னை.. வருகிறது 18 புதிய பேருந்து நிலையங்கள்.. இனி பிரச்னையே இல்ல!
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
TN Rain Alert: தமிழ்நாட்டில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு! எந்தெந்த மாவட்டங்கள் தெரியுமா?
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
கனடா – இந்தியா பிரச்னையில் அமித்ஷா.! கொதித்தெழுந்த இந்தியா.! நடந்தது என்ன? 
"விஜயை விமர்சிக்க வேண்டாம்" இபிஎஸ் போடும் புது கணக்கு.. 2026 தேர்தலில் சம்பவம் இருக்கு போலயே!
Prashant Kishor: ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
ஒரு தேர்தல் ஆலோசனைக்கு எவ்வளவு வாங்கினேன் தெரியுமா? பிரசாந்த் கிஷோர் ஓபன் டாக்.!
"ஊர்களுக்கு ராமர், கிருஷ்ணர்னுதான் பேர் வைக்கனும்" தடாலடியாக பேசிய அஸ்ஸாம் முதல்வர்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
3 வயசு குழந்தை.. சாக்லெட்டை காட்டி வெறிச் செயலில் ஈடுபட்ட கொடூரன்.. திருப்பதியை உலுக்கிய சம்பவம்!
Kodaikanal: தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
தொடர் விடுமுறையை கொண்டாட கொடைக்கானலுக்கு படையெடுத்த சுற்றுலா பயணிகள்
Embed widget