Parliament attack: ’முழு விசாரணை தேவை’ .. நாடாளுமன்ற அத்துமீறல் விவகாரத்தில் காங்கிரஸ் வலியுறுத்தல்
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்து வருகின்றனர்.
நாடாளுமன்றத்தில் இளைஞர்கள் அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பாக காங்கிரஸ் கட்சி தலைவர்கள் முழுமையான விசாரணை தேவை என வலியுறுத்தியுள்ளனர்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் புதிய வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இன்று வழக்கம்போல மக்களவை, மாநிலங்களவை என இரு அவைகளும் நடைபெற்றன. அப்போது மதியம் 1 மணியளவில் திடீரென பார்வையாளர் மாடத்தில் இருந்த இரு இளைஞர்கள் கீழே மக்களவைக்கு குதித்தனர். அவர்கள் இருவரும் நிறங்களை வெளிக்கொணரும் வெடிகளை வைத்திருந்தனர். சபாநாயகர் இருக்கையை நோக்கி எம்.பி.க்களின் இருக்கை வழியாக நுழைய முயன்ற இருவரையும் அங்கிருந்த எம்.பி.,க்கள் பிடித்து பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேசமயம் நாடாளுமன்றம் வெளியே 2 பெண்கள் போராட்டத்தில் ஈடுபட மொத்தமாக 4 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என மாநில, அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன வெளியிட்டுள்ள பதிவில், “இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற பாதுகாப்பு மீறல் மிகவும் துயரமான சம்பவமாகும். இது குறித்து உள்துறை அமைச்சர் இரு அவைகளுக்கும் வந்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
आज संसद में जो security breach हुआ वह एक बहुत गंभीर मामला है। हम माँग करते हैं कि गृह मंत्री जी दोनों सदनों में आ कर इस पर Statement दें।
— Mallikarjun Kharge (@kharge) December 13, 2023
ये प्रश्न है कि इतने बड़े security महकमें में कैसे दो लोग अंदर आ कर Cannister से गैस वहाँ पर छोड़े हैं ?
आज ही हमने 22 साल पहले हुए संसद… pic.twitter.com/owFkXG90CV
கேள்வி என்னவென்றால், இவ்வளவு பெரிய பாதுகாப்புப் பிரிவிற்குள் இரண்டு பேர் வந்து, அங்குள்ள ஒரு கேனிஸ்டரில் இருந்து எப்படி வாயுவை வெளியிட்டார்கள்? தியாகிகள் தினமான இன்று, 22 ஆண்டுகளுக்கு முன்பு நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய துணிச்சலான பாதுகாப்புப் படை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறோம்.அரசாங்கம் இதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் என்று நம்புகிறோம், முழு சம்பவம் குறித்தும் முழுமையான விசாரணையை நாங்கள் கோருகிறோம். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு நாங்கள் எப்போதும் தயாராக இருக்கிறோம்.
காங்கிரஸ் எம்பி கௌரவ் கோகோய் கூறுகையில், " புதிய நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லை. கடவுள் அருளால் யாருக்கும் எதுவும் ஆகவில்லை. யாருடைய பாஸ் மூலம் அவர்கள் உள்ளே வந்தார்கள் என்று பாஜக எம்பியிடம் கேள்வி கேட்க வேண்டும். பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்த வேண்டும்” என தெரிவித்துள்ளார்.