Watch video: பின்னாடி பற்றி எரியும் தீ... பதறாமல் சாப்பிடும் சாப்பாடு ராமன்கள்...வீடியோ பாருங்க..!
பிவாண்டியில் உள்ள அன்சாரி திருமண மண்டபத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த பிறகும் விருந்தினர்கள் இரவு உணவை ருசிப்பதை வீடியோவில் பதிவாகியுள்ளது.
திருமண மண்டபத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்துக்கு மத்தியில் விருந்தினர்கள் இரவு உணவு உண்ணும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் தானேயில் ஒரு திருமண விழாவில் விருந்தினர்கள் தொடர்ந்து உணவு உண்பதைக் காட்டும் வீடியோ இணையத்தில் வெளியாகியுள்ளது. பிவாண்டியில் உள்ள அன்சாரி திருமண மண்டபத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தை கவனித்த பிறகும் விருந்தினர்கள் இரவு உணவை ருசிப்பதை வீடியோவில் பதிவாகியுள்ளது. ஸ்டோர் ரூமில் ஏற்பட்ட தீ விபத்தில் பல இரு சக்கர வாகனங்கள் எரிந்து நாசமானது. Watch Video: பி.எஸ்.சி முடிச்சிட்டு பிச்சை எடுக்கிறேன்.! ஆங்கிலத்தில் அலறவிட்ட பெண்!
பெரும் தீ விபத்துக்கு இடையே, திருமண வரவேற்பில் கலந்து கொண்ட விருந்தினர்கள் தங்கள் இரவு உணவை ரசித்துக் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர். அவர்கள், பின்னணியில் எரியும் தீயால் பதறமால் கூலாக சாப்பிட்டனர். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி சமூகவலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, நெட்டிசங்கள் யார் இவங்க என்ற மோடில் தங்களின் கருத்தை பதிவிட்டனர்.
#WatchVideo: Even as fire-ravaged #AnsariMarriage ground in #Bhiwandi last night, people seem to have enjoyed their dinner in a marriage reception held in the same compound #Marriage #ViralVideo #News #Trending #WeddingSeason #LoveForfood pic.twitter.com/sn6oHqCuj1
— Free Press Journal (@fpjindia) November 29, 2021
தீ விபத்து குறித்து இரவு 10 மணியளவில் தகவல் கிடைத்ததும் 3 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தன. பிவாண்டி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், இரவு 11 மணியளவில் தீ அணைக்கப்பட்டது. ஸ்டோர் ரூமில் அலங்காரத்திற்கான பொருட்கள் மற்றும் நாற்காலிகள் எரிந்து நாசமாகின. மேலும். திருமண மண்டபம் அருகே நிறுத்தப்பட்டிருந்த 6 இருசக்கர வாகனங்களும் எரிந்து நாசமானது. Watch Video | விராட் கோலிக்கு டான்ஸ் டீச்சர் சாஹலின் மனைவி... வைரலாகும் RCB வீடியோ..
தீ விபத்துக்கான சரியான காரணம் தெரியவில்லை, திருமணத்தில் பயன்படுத்தப்படும் பட்டாசுகள் காரணமாக இருக்கலாம் என்று அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்