(Source: ECI/ABP News/ABP Majha)
Video: ஆற்றின் நடுவில் சிக்கிய நபர்; உயிரை பணயம்வைத்து காப்பாற்றிய 2 காவல்துறையினர்: குவியும் பாராட்டு.!
Telangana Police : தெலங்கானாவில் ஆற்றின் நடுவே சிக்கி கொண்ட நபரை துணிச்சலாக காவல்துறையினர் காப்பாற்றினர்.
Telangana police cops: ஆபத்தான சூழ்நிலை இருந்தபோதும் உயிரை பணயம் வைத்து ஒருவரின் உயிரை இரண்டு காவல்துறையினர் காப்பாற்றிய சேவை பண்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.
வெள்ளத்தில் சிக்கி கொண்ட நபர்:
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழையானது பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிப்பதை பார்க்க முடிகிறது. மேலும் பலர் தங்களது வாழ்விடங்களையும் இழந்து வாடுவதையும் அறிய முடிகிறது. இந்த கனமழையால் சிலர் உயிரிழந்த சோக நிகழ்வுகளும் ஏற்பட்டுள்ளன.
இந்நிலையில், இரண்டு காவலர்கள், தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, மக்களுக்கு சேவை செய்யும் நோக்கில், ஒரு நபரின் உயிரை காப்பாற்றிய சம்பவமானது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த நபரை காப்பாற்றும் வீடியோவை தெலங்கான காவல்துறையானது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
నాగర్ కర్నూల్ నాగనూల్ వాగులో ఓ వ్యక్తి కొట్టుకుపోతుండగా తక్షణమే స్పందించి ధైర్య సాహసాలతో ప్రాణాలకు తెగించి కాపాడిన హెడ్ కానిస్టేబుల్ తకీయొద్దీన్, కానిస్టేబుల్ రాములను జిల్లా ఎస్పీ, గౌరవ డిజిపి శ్రీ డా.జితేందర్, ఐపీఎస్ అభినందించారు.#TelanganaPolice pic.twitter.com/Q6cfVseWbf
— Telangana Police (@TelanganaCOPs) September 1, 2024
உயிரை காப்பாற்றிய காவலர்கள்:
அந்த வீடியோவில், நிரம்பி வழியும் ஆற்றில் ஒரு நபர் மாட்டிக் கொள்வதை பார்க்க முடிகிறது. அப்போது இரண்டு காவல்துறையினர் ஆபத்தை உணராமல் நீரோடையின் நடுவில் சென்றனர். அப்போது சமயோசிதமாக யோசித்து, ஒரு காரையும் ஆற்றின் நடுவில் நிறுத்தியிருக்கின்றனர். அப்போது , மேலும் ஒரு காவலர் காரின் கதவை பிடித்துக் கொண்டு, மற்றொரு காவலரை பிடித்திருக்கிறார். அடுத்த காவலர் , மற்றொரு காவலரை பிடிக்க , அந்த காவலர் வெள்ள நீரில் சிக்கி கொண்ட நபரை பிடித்து இழுக்க , அவர் காப்பாற்றப்பட்டார்.
இந்நிலையில், தங்களுக்கு ஆபத்துக்கு இருப்பதற்கான வாய்ப்பையும் உணராமல், சேவையே மாண்பு என கருதி ஒருவரின் உயிரை காப்பாற்றிய காவல்துறையினர் சேவையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Viral Video:குடியிருப்பில் நுழைந்த மலைப்பாம்பு.. அடுத்து நடந்த சம்பவம்! வைரல் வீடியோ