(Source: ECI/ABP News/ABP Majha)
Watch Video: ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்த கொள்ளையர்கள்! அசால்ட்டாக விரட்டியடித்த தாய், மகள் - வைரல் வீடியோ!
தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Watch Video: தெலங்கானாவில் கொள்ளையர்களுடன் தாய் மற்றும் மகள் சண்டையிடும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கொள்ளையர்களை துணிச்சலாக விரட்டி தாய், மகள்:
தெலங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் பைகா காலனியில் உள்ள ஒரு வீட்டிற்குள் நாட்டுத் துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இரண்டு கொள்ளையர்கள் ஒரு வீட்டிற்குள் நுழைந்தனர். அப்போது, வீட்டில் இருந்த தாய் மற்றும் மகள் இருவரும் கொள்ளையர்களுடன் சண்டையிட்டு, அவர்களை கடுமையாக தாக்கி விரட்டியுள்ளனர்.
முதலில் தலையில் ஹெல்மெட் அணிந்து, வீட்டிற்குள் புகுந்த கொள்ளையனை கட்டையால் தாக்கி வீட்டைவிட்டு வெளியேற்றினர். இரண்டாவது கொள்ளையனை கையில் கத்தியை காட்டிய மிரட்டியிருக்கிறார். அப்போதும், தாய், மகள் இருவரும் அவரை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றினர். இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவில் பதிவாகி உள்ளது.
வைரல் வீடியோ:
அந்த வீடியோவில், முதலில், வீட்டிற்குள் ஹெல்மேட் உடன் நுழைந்த கொள்ளையனை தாய், மகள் இருவரும் கட்டையால் தாக்கி, அவரை கீழே தள்ளி உதைத்து வீட்டை விட்டு வெளியேற்றினர். இதன்பின், அக்கம் பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். இரண்டாவதாக வீட்டிற்குள் துப்பாக்கியுடன் நுழைந்த கொள்ளையனையும் தாய், மகள் இருவரும் அடித்து வீட்டில் இருந்து வெளியேற்றினர்.
#WATCH | Hyderabad, Telangana: A mother and daughter fight back against two armed robbers who enter their residence to rob and kill them, in Paigah Colony, Rasoolpura.
— ANI (@ANI) March 22, 2024
(CCTV visuals, confirmed by Hyderabad Police) pic.twitter.com/QRiVGauYOo
கொள்ளையனை அக்கம் பக்கத்தினர் பிடிக்க தயங்கினாலும், துணிச்சலாக தாய், மகள் இருவரும் கொள்ளையர்களை தாக்கி வீட்டை விட்டு வெளியேற்றியது சிசிடிவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இவர்கள் இரண்டு பேரின் துணிச்சலான செயலுக்கு பாரட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடிக்க முயன்றவர்கள் சுஷில் குமார் மற்றும் பிரேம்சந்திரா என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. மேலும், கொள்ளையர்களை விரட்டி அடித்தது அமிதா மஹ்னோத் மற்றும் அவரது மகள் என்று தெரியவந்தது. இவர்கள் இருவரும் தற்காப்புக் கலையில் திறமையானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க
Lok Sabha Election 2024: தஞ்சையில் முதலமைச்சர் ஸ்டாலின்! சென்னையில் உதயநிதி! இன்று தேர்தல் பரப்புரை!