தெலங்கானாவில் ஹெலிகாப்டர் விபத்து : தமிழக பெண் பயற்சி விமானி உள்பட இருவர் உயிரிழப்பு
தெலுங்கானாவில் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து நொறுங்கியதில் தமிழக பெண் விமானி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தெலுங்கானா மாநிலத்தில் பிளை ஏவியேஷன் பிரைவேட் லிமிடெட் என்ற தனியார் விமான நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவிற்கு பறந்து சென்றது. அப்போது, தல்கொண்டா பகுதிக்கு அருகில் பறந்தபோது விமானியின் கட்டுப்பாட்டை இழந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்தது. இதனால், ஹெலிகாப்டரில் இருந்த தமிழக விமானி உள்பட இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். தமிழகத்தைச் சேர்ந்த பயிற்சி விமானியான மகிமா என்பவர்தான் இந்த விபத்தில் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
A trainee woman pilot dies in a private aviation academy trainee aircraft crash at Pedavoora mandal of Nalgonda district. Aircraft took off from aviation academy in Macharla, Guntur district of Andhra Pradesh #Helicopter #chopper #crash #AndhraPradesh #Telangana pic.twitter.com/owjlrNWXqI
— Sudhakar Udumula (@sudhakarudumula) February 26, 2022
இதனால் அந்த பகுதியில் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் குவிந்துள்ளனர்.