`ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ்!’ - லல்லு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவுக்குத் திருமணம்!
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவ் டெல்லியில் கடந்த டிசம்பர் 9 அன்று டெல்லியைச் சேர்ந்த ரேச்சல் கோடின்ஹோவைத் திருமணம் செய்து கொண்டார்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் முக்கிய தலைவருமான தேஜஸ்வி யாதவ் டெல்லியில் கடந்த டிசம்பர் 9 அன்று டெல்லியைச் சேர்ந்த ரேச்சல் கோடின்ஹோவைத் திருமணம் செய்து கொண்டார். டெல்லியின் சைனிக் தோட்டத்தில் இந்து மத முறைப்படி நடத்தப்பட்ட இந்தத் திருமண நிகழ்வுக்குப் பிறகு, தேஜஸ்வியின் மனைவி ரேச்சல் இனி ராஜேஸ்வரி யாதவ் என்று அழைக்கப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்தத் திருமண நிகழ்ச்சியில் உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், அவரின் மனைவி டிம்பிள் யாதவ், மாநிலங்களவை உறுப்பினர் மிசா பாரதி உள்ளிட்ட பல்வேறு மூத்த அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
கடந்த 7 ஆண்டுகளாக பழக்கம் கொண்டவர்களாக இருக்கும் இந்தப் புதுமணத் தம்பதியினர் கடந்த டிசம்பர் 7 அன்று திருமணத்திற்காக நிச்சயம் செய்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நெருங்கிய நண்பர்களும், குடும்பத்தினரும் கலந்துகொண்டனர்.
பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவின் மகனான தேஜஸ்வி யாதவ் தன் குடும்பத்தில் தன்னுடன் பிறந்தவர்களுள் இறுதியாகத் திருமணம் செய்துள்ளார். அவருக்கு 7 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளார். பீகார் சட்டமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக இருக்கிறார் தேஜஸ்வி யாதவ். பீகாரின் ரகோபூரின் சட்டமன்றத் தொகுதியின் எம்.எல்.ஏவாகவும் பதவி வகிக்கிறார் தேஜஸ்வி யாதவ். கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2017ஆம் ஆண்டு முதல், பீகார் மாநிலத்தின் துணை முதல்வராகப் பதவி வகித்தவர் தேஜஸ்வி யாதவ் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க..
Next CDS of India: நாட்டின் அடுத்த தலைமைத் தளபதி யார்? - நீடிக்கும் குழப்பம்!
Mi-17 Black Box: விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் கருப்புப்பெட்டி கண்டுபிடிப்பு...
“ஒரு மருத்துவராக... சிகிச்சை பெற்று வரும் விமானி வருணை சந்தித்தேன்” - ஆளுநர் தமிழிசை பேட்டி!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்