டீன் ஏஜ் பருவத்தில் கர்ப்பம்... குடும்ப கட்டுபாட்டில் ஆர்வம் காட்டாத ஆண்கள்... பிரச்சினைக்கு தீர்வு என்ன?
நாடு முழுவதும் கருவுறுதல் விகிதம் நிலையாக இருக்கின்ற போதிலும், சில பகுதிகளில், டீன் ஏஜ் பருவத்தில் இளம் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்திருப்பது கவலை அளித்து வருகிறது.
நாடு முழுவதும் கருவுறுதல் விகிதம் நிலையாக இருக்கின்ற போதிலும், சில பகுதிகளில், டீன் ஏஜ் பருவத்தில் இளம் பெண்கள் கர்ப்பமாவது அதிகரித்திருப்பது கவலை அளித்து வருவதாக 2030ஆம் ஆண்டுக்கான குடும்ப கட்டுபாடு திட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குடும்ப கட்டுபாடு திட்டத்தில் ஆண்களை ஈடுபடுத்த அவர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள் என்றும் கருத்தடை மருந்துகள் போதிய அளவில் கிடைக்காமல் இருப்பது பெரும் சவாலாக இருப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வாரத்தில் வெளியிடப்பட்ட ஆய்வறிக்கையில், "திருமணமான இளம் பருவத்தினர் மற்றும் இளம் பெண்களிடையே குறைவான கருத்தடை பயன்பாட்டை விளக்கும் பல காரணிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது. குழந்தை திருமணம் மற்றும் டீனேஜ் கர்ப்பம் இரண்டு மிக முக்கிய காரணிகளாக உள்ளன.
118 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பதின்ம வயதினரின் கருவுற்றவர்களின் சதவீதம் அதிகமாக இருப்பதாகவும், அவை பெரும்பாலும் பீகார் (19), மேற்கு வங்கம் (15), அசாம் (13), மகாராஷ்டிரம் (13), ஜார்கண்ட் (10), ஆந்திரப் பிரதேசம் (7), மற்றும் திரிபுரா (4) ஆகிய மாநிலங்களில் இருப்பது கண்டறிப்பட்டுள்ளது.
கூடுதலாக, இந்தியாவில் உள்ள மாவட்டங்களில் 44% க்கும் அதிகமான பெண்கள் 18 வயதை அடையும் முன்பே திருமணம் செய்துகொள்வது தெரியவந்துள்ளது. அவை, பீகார் (17), மேற்கு வங்கம் (8), ஜார்கண்ட் (7), அசாம் (4), உத்தரபிரதேசம், ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிராவில் தலா இரண்டு மாவட்டங்களாகும்.
இதில் கவனிக்க தக்க வேண்டியது, நவீன கருத்தடை பயன்பாடு இந்த மாவட்டங்களில் குறைந்த விகிதத்தில் இருப்பது தெரிய வந்துள்ளது. இந்தியா உலகின் இரண்டாவது பெரிய நாடு. மக்கள் தொகை வேகம் காரணமாக நாட்டின் மக்கள் தொகை இந்த நூற்றாண்டின் மத்தியில் வரை தொடர்ந்து வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், பின்னர் மக்கள்தொகை வளர்ச்சி கணிசமாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 136.3 கோடியை (1.36 பில்லியன்) எட்டியுள்ளது. மேலும் 2031 ஆம் ஆண்டில் 147.9 கோடியை (1.47 பில்லியன்) எட்டும் என்றும், 2036 ஆம் ஆண்டில் மேலும் 152.2 கோடியை (1.52 பில்லியன்) எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், 2031ஆம் ஆண்டு இளம் பருவத்தினர் 22.9 கோடியாகவும் (229 மில்லியன்) 2036ஆம் ஆண்டில் மேலும் 22 கோடியாக (220 மில்லியன்) உயரும். 15-24 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் எண்ணிக்கை 2011 இல் 23.3 கோடியாக (233 மில்லியன்) இருந்து 2021 இல் 25.2 கோடியாக (252 மில்லியன்) அதிகரித்து, 2031 இல் 23.4 கோடியாக (234 மில்லியன்) குறைந்து, மேலும் 2036 இல் 22.9 கோடியாக (229 மில்லியன்) குறையும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஆண் கருத்தடை முறைகள் பெரும்பாலும் ஆணுறை பயன்பாட்டியேலே சுருங்கிவிட்டதாகவும் ஆண் கருத்தடை விகிதம் 0.3% ஆக பதிவாகியுள்ளது. பெண்களின் கருத்தடை பயன்பாட்டின் அடிப்படையில் ஆண் கருத்தடை பயன்பாடு அமைந்துள்ளது. நவீன கருத்தடை சாதனங்களை வழங்குவதற்கு தனியார் துறையைப் பயன்படுத்துவதற்கான திட்டமும் இந்த குடும்ப கட்டுபாடு திட்டத்தில் அடங்கும்.
இதற்கிடையில், டீன் ஏஜ் குழந்தை பெற்று கொள்வதில் நிலையான சரிவு ஏற்பட்ட போதிலும், தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் (NFHS-4) இதன் சதவிகிதம் 7.9% இலிருந்து 6.8% ஆக (NFHS-5 இல்) குறைந்துள்ளது. இருப்பினும், இப்பிரச்னைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டி உள்ளது. குறிப்பாக 2030 வரை உலகிலேயே இளைய மக்கள்தொகையில் ஒன்றாக இந்தியா தொடரும் என்றும் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.