பயிற்சி எடுக்க சென்ற இடத்தில் பாலியல் வன்கொடுமை முயற்சி... தடுத்து நிறுத்திய கூடைப்பந்து வீராங்கனை... என்ன நடந்தது?
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் 18 வயது கூடைப்பந்து வீராங்கனையை மூன்று இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது.
பஞ்சாப் மாநிலம் மோகா மாவட்டத்தில் 18 வயது கூடைப்பந்து வீராங்கனையை மூன்று இளைஞர்கள் சேர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, மைதானத்தின் கூரையில் இருந்து வீராங்கனை தள்ளப்பட்டதில் அவருக்கு பல இடங்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது.
#Punjab Even after five days, the Moga police have failed to arrest three youngsters who allegedly tried to rape an 18-year-old Dalit basketball player and pushed her off a 25-foot-high roof of an indoor stadium on August 12..
— The Dalit Voice (@ambedkariteIND) August 18, 2022
இதுகுறித்து காவல்துறை அலுவலர்கள் கூறுகையில், "வீராங்கனையின் இரண்டு கால்களிலும் தாடையிலும் காயம் ஏற்பட்டுள்ளது. லூதியானாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடந்துள்ளது. அன்றிலிருந்து குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும் தலைமறைவாகினர்.
பாதிக்கப்பட்டவரின் தந்தை அளித்த புகாரின்படி, பாதிக்கப்பட்ட வீராங்கனை மோகாவில் உள்ள மைதானத்திற்கு பயிற்சிக்காக சென்றுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான ஜதின் காந்தா, மைதானத்தில் அவரை பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுத்த முயன்றதாகக் கூறப்படுகிறது.
Punjab: An 18-year-old basketball player was thrown off a stadium’s roof after she resisted a rape attempt in Punjab’s Moga.
— Organiser Weekly (@eOrganiser) August 18, 2022
The woman suffered multiple fractures.
குற்ற சம்பவத்தின் போது, குற்றம் சாட்டப்பட்டவர்களை தடுக்க முயன்றபோது, அவர்கள் பாதிக்கப்பட்ட வீராங்கனையை சுமார் 25 அடி உயரத்தில் இருந்து தள்ளிவிட்டனர். இதன் காரணமாக, பல இடங்களில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
இந்திய தண்டனை சட்டம், 307 (கொலை முயற்சி) மற்றும் 376 (பாலியல் வன்கொடுமை) உள்பட பல பிரிவுகளின் கீழ் ஜதின் மற்றும் அவரது இரண்டு கூட்டாளிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக மோகா மூத்த காவல் கண்காணிப்பாளர் குல்னீத் குரானா வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்