Breaking news LIVE: பருவமழை - சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
Tamil Nadu Rain News Today LIVE: தமிழ்நாட்டில் நடைபெறும் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை உடனுக்குடன் கீழே லைவ் ப்ளாக்கில் அறிந்து கொள்ளலாம்.

Background
Tamil Nadu Latest News LIVE
வடகிழக்கு பருவமழை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க ஸ்டாலினிடம் தொலைபேசி வாயிலாக பிரதமர் மோடி கேட்டறிந்தார். நிவாரணப் பணிகள் குறித்து எடுத்துரைத்த முதல்வர், தமிழகத்தின் மாநிலப் பேரிடர் நிதியானது கொரோனா நிவாரணப் பணிகளுக்கும், இதுவரை ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கும் செலவு செய்யப்பட்டுள்ளதால், தேசிய பேரிடர் நிதியில் இருந்து போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துதர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பருவமழை - சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்
பருவமழையை முன்னிட்டு சென்னையில் உள்ள 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெறுகிறது. ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை நாளை காலை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னைக்கு 80 கிலோ மீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு
வங்கக் கடல் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 80 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. வடக்கு தமிழ்நாட்டிற்கும் தெற்கு ஆந்திராவுக்கும் இடையே மாலை 5.30 மணி முதல் 8.30 மணிக்குள் சென்னை அருகே கரையைக் கடக்கும்.





















