மேலும் அறிய

Tamil Nadu Coronavirus Live: தமிழகத்தில் 34 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்தது

தமிழகம் மற்றும் இந்தியாவில் மேற்கொள்ளப்படும் கொரோனா நோய்த் தொற்று மேலாண்மை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த லைவ் ப்ளாக்கில் தெரிந்து கொள்ளலாம்.

LIVE

Key Events
Tamil Nadu Coronavirus Live:  தமிழகத்தில் 34 ஆயிரத்திற்கும் கீழ் கொரோனா பாதிப்பு குறைந்தது

Background

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33,764 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 29,717 பேர் நோய்த் தொற்றில் இருந்து புதிதாக குணமடைந்துள்ளனர். இதன்மூலம், மாநிலத்தில் தற்போது கொரோனா தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 3,10,224  ஆக குறைந்துள்ளது.  

இந்தியாவில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளது.  இதில், 15,71,49,593 முதல் டோஸ் மற்றும் 4,35,12,863 இரண்டாம் டோஸ் என மொத்தம் 20,06,62,456 டோஸ்களும் அடங்கும். நாடு முழுவதும் 45 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 34 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளனர். மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 42 சதவீதத்துக்கும் அதிகமானோர் குறைந்தபட்சம் முதல் டோஸ் தடுப்பு மருந்தை இதுவரை பெற்றுள்ளனர். 

20:49 PM (IST)  •  27 May 2021

தமிழகத்தில் 34 ஆயிரத்திற்கும் கீழ் குறைந்த கொரோனா பாதிப்பு

தமிழ்நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு எந்த தளர்வும் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. தமிழக அரசு விதித்துள்ள ஊரடங்கு காரணமாக கடந்த சில தினங்களாக கொரோனா பரவல் படிப்படியாக குறைந்து வருகிறது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மட்டும் 33 ஆயிரத்து 361 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி உள்ளது. இதனால், மாநிலம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 லட்சத்து 78 ஆயிரத்து 621 ஆக பதிவாகியுள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை 4 லட்சத்து 93 ஆயிரத்து 881 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த வாரம் தினசரி 6 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வந்த சூழலில், கடந்த ஒரு வாரமாக கொரோனா பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. இந்த நிலையில், இன்று சென்னையில் கொரோனாவால் 2 ஆயிரத்து 779 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் இன்று 30 ஆயிரத்து 582 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்றைய கணக்குப்படி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 43 ஆயிரத்து 624 நபர்கள் ஆவர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு மொத்தம் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கையில் ஆண்கள் மட்டும் 11 லட்சத்து 69 ஆயிரத்து 810 ஆகும். பெண்கள் 8 லட்சத்து 8 ஆயிரத்து 773 நபர்கள் ஆவார்கள். மூன்றாம் பாலினத்தவர்கள் 38 பேர் ஆவர். தொற்று உறுதியானவர்களில் ஆண்கள் மட்டும் 18 ஆயிரத்து 618 நபர்கள் ஆவர். பெண்கள் 14 ஆயிரத்து 743 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் இன்று குணம் அடைந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்து 63 நபர்கள் ஆவர். இதனால், தமிழ்நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணம் அடைந்தோர் எண்ணிக்கை 16 லட்சத்து 43 ஆயிரத்து 284 ஆகும். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்று ஒருநாள் மட்டும் 474 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களில் 199 பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். 295 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்கள். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 22 ஆயிரத்து 289 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 6 ஆயிரத்து 723 ஆகும்.

18:51 PM (IST)  •  27 May 2021

நாடு முழுவதும் ஒரே நாளில் ரயில் மூலமாக 1,195 டன் ஆக்சிஜன் விநியோகம்

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு தினசரி 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. தினசரி நாடு முழுவதும் 3 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்து வருகின்றனர். உயிரிழப்பவர்களில் பெரும்பாலானோர் ஆக்சிஜன் பற்றாக்குறையாலே உயிரிழந்துள்ளனர். இதனால், ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகிறது. ரயில் போக்குவரத்து மூலம் நேற்று மட்டும் மிக அதிக அளவாக 1,195 டன் உயிர்காக்கும் திரவ ஆக்சிஜன் நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஒரே நாளில் அதிகபட்சமாக 1,142 டன் ஆக்சிஜன் விநியோகிக்கப்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்தது.

17:08 PM (IST)  •  27 May 2021

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 1.84 கோடி தடுப்பூசிகள் உள்ளது

கொரோனா பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் மத்திய அரசு இதுவரை சுமார் 22 கோடி தடுப்பூசிகளை மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் இலவசமாக வழங்கியுள்ளது. அவற்றில் மொத்தம் 20 கோடியே 17 லட்சத்து 59 ஆயிரத்து 768 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவற்றில் வீணாக்கிய தடுப்பூசிகளும் அடங்கும்.  தற்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் சுமார் 1 கோடியே 84 லட்சத்து 90 ஆயிரத்து 522 தடுப்பூசி டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. அடுத்த மூன்று நாட்களில் மத்திய மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 11 லட்சத்து 42 ஆயிரத்து 630 தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு கூடுதலாக வழங்க உள்ளது.  

16:30 PM (IST)  •  27 May 2021

கொரோனா தொற்று அதிகரிப்பால் ஆந்திராவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு

நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 2 லட்சத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. நாட்டில் கொரோனா வைரசின் பாதிப்பு மகாராஷ்ட்ரா, டெல்லி உள்ளிட்ட 8 மாநிலங்களிலே அதிகளவில் இருப்பதாக ஏற்கனவே மத்திய அரசு தெரிவித்துள்ளது, அந்த பட்டியலில் ஆந்திர மாநிலமும் உள்ளது. இந்த நிலையில், அந்த மாநிலத்தில் கொரோனா பரவல் காரணமாக இந்த மாதம் நடைபெறுவதாக இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. மேலும், ஜூலை அல்லது ஆகஸ்டு மாதத்தில் தேர்வுகளை நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.

14:51 PM (IST)  •  27 May 2021

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் கொரோனா குறையவில்லை - முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 10-ந் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும் கொரோனா பரவல் கட்டுக்குள் அடங்காத காரணத்தால், கடந்த 24-ந் தேதி முதல் மாநிலம் முழுவதும் முழு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு வரும் 31-ந் தேதியுடன் நிறைவு பெற உள்ளதால், ஊரடங்கை நீட்டிப்பது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமை செயலகத்தில் உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, கடந்த இரு வாரங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்திட இந்த அரசு எடுத்துள்ள போர்க்கால நடவடிக்கைகள் காரணமாகவும், முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள காரணத்தாலும், மாநில அளவிலும், சென்னை மாநகரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களிலும், கொரோனா தொற்றின் தாக்கம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. இருப்பினும் மாவட்டவாரியாக இந்த தொற்றை ஆராய்ந்து பார்க்கும்போது, தமிழகத்தில் கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, ஈரோடு, சேலம் ஆகிய 6 மாவட்டங்களில் கொரோனா தொற்று பரவல் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழ்நிலையே காணப்படுகிறது. எனவே, இந்த 6 மாவட்டங்களில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும், இறப்புகளை குறைக்கவும் தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வது குறித்து உங்களது கருத்துக்களை கேட்டறியவும், ஆலோசனை செய்திடவும் இந்த ஆய்வுக்கூட்டத்தை கூட்டியுள்ளேன். இந்த ஆறு மாவட்டங்களைப் பொறுத்தவரையில், அரசுத் துறையிலும், தனியார் துறையிலும் நல்ல மருத்துவ கட்டமைப்பை கொண்டுள்ள மாவட்டங்கள் ஆகும். இந்த கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்தி, மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அனைவருக்கும் உடனடியாக போதிய படுக்கை வசதிகள் கிடைப்பதை மாவட்ட ஆட்சியர்கள உறுதிப்படுத்த வேண்டும். கொரோனா தொற்றை கண்டறிவதற்கான ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனைகளின் எண்ணிக்கை இந்த மாவட்டங்களில் நன்கு உயர்த்தப்பட்டுள்ள போதிலும், நோய்ப்பரவல் அதிகம் உள்ள பகுதிகளை கண்காணித்து, அப்பகுதிகளில் போதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, நோய்த் தொற்றுள்ள அனைவரும் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட வேண்டும். இதில், கோவை மற்றும் சேலம் மாவட்டங்களில் அதிக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மற்ற நான்கு மாவட்டங்களில் 18 வயது 44 வயதுரை வரையில் உள்ளவர்களுக்கு தடுப்பூசிகளை அதிகளவில் உடனடியாக அனைவருக்கும் கிடைத்திட செய்ய வேண்டும். மேலும், அதிகளவில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட ஆட்சியர்கள் இதுகுறித்த நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகளைத் தர வேண்டும். இரண்டாம் அலையின் இந்த கட்டத்தில் நோய் பரவல் கிராமப்பகுதிகளிலும் அதிகமாக காணப்படுவதை கருத்தில் கொண்டு, நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து பிற பகுதிகளுக்கு நோய் பரவாமல் தடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மேற்கொள்ளப்பட உள்ள நடவடிக்கைகள் பற்றியும், அரசு அளவில் தேவைப்படும் உதவிகள் பற்றியும் மாவட்ட ஆட்சியர்கள் தெரிவிக்க வேண்டும். கொரோனா இரண்டாவது அலை தாக்கத்தை நமது மாநிலம் கட்டுப்படுத்துவதற்கு, இந்த ஆறு மாவட்டங்களில் நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் வெற்றி அடைவது அவசியம் என்பதை மனதில் கொண்டு, அடுத்த ஓரிரு வாரங்களுக்கு அனைத்து முயற்சிகளையும் முனைப்புடன் மாவட்ட ஆட்சியர்கள் மேற்கொள்ள வேண்டும்.” இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர், காவல்துறை, சுகாதாரத்துறை உயரதிகாரிகள் ஆகியோரும் பங்கேற்றனர்.

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
Jasprit Bumrah: பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..
"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!
Embed widget