Taj mahal: தாஜ்மஹால் ராஜஸ்தான் அரசு குடும்பத்தின் நிலத்தில் கட்டப்பட்டுள்ளது - சர்ச்சையை கிளப்பும் பாஜக எம்.பி.
தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது, அதை நிரூபிக்கவும் தயார் என்று பாஜக எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்துக்கு சொந்தமானது, அதை நிரூபிக்கவும் தயார் என்று பாஜக எம்பி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சமீபநாட்களாக தாஜ்மஹால் பேசுபொருளாகியுள்ளது. உலகப் பணக்காரர்களில் நம்பர் ஒன் இடத்தில் இருக்கும் எலான் மஸ்க் தான் 2007ம் ஆண்டு தாஜ்மஹாலுக்குச் சென்றதாகவும், உண்மையாகவே அது உலக அதிசயங்களில் ஒன்று தான் என்று கூறியிருந்தார். இதனையடுத்து அவரது தாய் மாயே மஸ்க் 1954ல் அவரது பெற்றோர்கள் தென்னாப்பிரிக்காவில் இருந்து ஆஸ்திரேலியா செல்லும் வழியில் தாஜ்மஹாலை சென்று பார்த்ததாகக் கூறி இரண்டு பழமையான புகைப்படங்களைப் பகிர்ந்திருந்தார். கூடவே தானும் 2007ல் தாஜ்மஹாலை சென்று சுற்றிப்பார்த்ததாகக் குறிப்பிட்டிருந்தார். அதோடு, தாஜ்மஹாலின் உள்ளே பல ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருக்கும் அறைகளை திறந்து மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று அயோத்தியாவின் பாஜக செய்திதொடர்பாளர் ரஜ்னீஷ் சிங் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில், தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் இடம் ஜெய்ப்பூர் அரச குடும்பத்திற்குச் சொந்தமானது என்று ராஜ்சமந்த் தொகுதி எம்பி தியா குமாரி கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். இது குறித்து பேசியுள்ள அவர், “தற்போது தாஜ்மஹால் கட்டப்பட்டிருக்கும் இடத்தில் ஜெய்ப்பூர் அரசின் அரண்மணை இருந்தது. அதை அவர்களிடம் இருந்து ஷாஜகான் பிடுங்கிக் கொண்டு அதில் தான் தாஜ்மஹாலைக் கட்டியுள்ளார். தாஜ்மஹால் இருந்த இடத்தில் ஜெய்ப்பூர் அரச குடும்பத்தின் அரண்மணை இருந்ததற்கான ஆதாரம் என்னிடம் இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.
மேலும், ஜெய்ப்பூர் அரச குடும்பத்தினர் தங்களது நிலத்திற்கு உரிமை கோருவது தொடர்பாக ஆலோசனையில் உள்ளனர் என்றும் அவர்களுக்கு ஆவணங்களை அளிப்பது உள்ளிட்ட முழு ஆதரவையும் தரவிருப்பதாகக் கூறியுள்ளார். தாஜ்மஹாலின் அறைகளை திறக்க வேண்டும் என்ற மனுவை வரவேற்றுள்ள அவர், தாஜ்மஹால் இடிக்கப்பட வேண்டும் என்று நான் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் அறைகள் ஆய்வுக்காக திறக்கப்படவேண்டும். பல நூற்றாண்டுகளாக அதன் உள்ளே இருக்கும் சில அறைகள் திறக்கப்படாமலேயே இருக்கிறது. அது திறக்கப்பட்டால் அதனுள் என்ன இருக்கிறது என்பது குறித்து நமக்குத் தெரியவரும் என்று தியா குமாரி குறிப்பிட்டிருக்கிறார்.
தியா ராஜகுமாரி எம்பி இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்த போது ஜெய்ப்பூர் நகரின் பேரரசராக இருந்த இரண்டாம் மான்சிங்கின் பேத்தி என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்