மேலும் அறிய

அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை...விதிகளை மீறவில்லை...உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தகவல்..!

அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளையும் மீறவில்லை என்றும் உச்ச நீிதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு தெரிவித்துள்ளது. பங்கு சந்தையை ஒழுங்கு செய்வதில் இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி)  தவறி இருக்கிறது என்ற முடிவுக்கு வர முடியாது என்றும் நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

புயலை கிளப்பிய ஹிண்டன்பர்க் அறிக்கை:

அமெரிக்காவை சேர்ந்த  ஹிண்டன்பர்க் எனும் நிறுவனம் சமீபத்தில் ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. அதில், அதானி குழுமம் பங்குசந்தையில் ஏராளமான மோசடி வேலைகளை செய்ததாக குற்றம்சாட்டியது. இந்த குற்றச்சாட்டுகள் அனைத்தையும் அதானி குழுமம் மறுத்து வருகிறது.

ஆனால், அறிக்கை வெளியானதன் விளைவாக, அதானி கழுமம் பெரிய அளவில் இழப்பை சந்தித்தது. பங்கு சந்தையில், 10 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக அதானி குழுமம் இழப்பை சந்தித்திருப்பதாக தகவல் வெளியானது. பங்கு சந்தையில் அதானி குழுமத்தின் பங்குகளை வாங்கிய இந்திய முதலீட்டாளர்கள் பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளனர். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கோரி பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.  

உச்ச நீதிமன்றத்தில் வழக்கு:

கடந்த மார்ச் 2ஆம் தேதி, இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு, அதானி குழுமம் தொடர்பாக ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கை குறித்தும் அதானி குழுமம் ஏதேனும் விதி மீறலில் ஈடுபட்டதா என்பது பற்றியும் ஆராய இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியத்திற்கு (செபி) உத்தரவிட்டது. இரண்டு வார காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது.

அதேபோல, இதுபோன்ற சூழல் எதிர்காலத்தில் நடைபெறாமல் இருக்கும் வகையில் இந்திய பங்கு சந்தையின் முதலீட்டாளர்களை பாதுகாப்பது தொடர்பாக ஆராய நிபணர் குழு ஒன்றையும் உச்ச நீதிமன்றம் அமைத்தது. கடந்த வாரம், நிபுணர் குழு தங்களின் அறிக்கையை தாக்கல் செய்தது.

தற்போது, அந்த அறிக்கையை உச்ச நீதிமன்றம் வெளியிட்டுள்ளது. அதில், அதானி குழுமம் எந்த தவறும் செய்யவில்லை என்றும் விதிகளை மீறவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நிபுணர் குழு சொன்னது என்ன?

அதானி குழுமம், தங்களின் பங்குகளின் விலையை செயற்கையாக உயர்த்தியது போன்று தெரியவில்லை. சில்லறை முதலீட்டாளர்களை பாதுகாக்கும் வகையில் அதானி குழுமம் நடவடிக்கை எடுத்துள்ளது. எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், பங்குதாரர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்த உதவியது என உச்ச நீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

விதிமீறல் நடந்தது தொடர்பான குற்றச்சாட்டை விசாரிப்பதற்கு, தங்கள் சந்தேகத்தை கட்டுப்பாட்டாளரால் நிரூபிக்க முடியவில்லை. அதானி குழுமத்தில் முதலீடு செய்த வெளிநாட்டு முதலீட்டாளர்களும் செபி விதிகளை பின்பற்றியுள்ளனர் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
TVK Kanimozhi: ”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
”தவெக அரசை நாயுடன் ஒப்பிட்டு பேச்சு” பாஜக கூட்டணியை உறுதி செய்த கனிமொழி?
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
இந்த தலத்துக்கு வந்தாலே போதும் நவக்கிரக தோஷமும் நீங்கிவிடும்... எந்த தலம் தெரியுங்களா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
Tata Upcoming Cars: நாங்க இறக்குறோம்.. டாடா அறிமுகப்படுத்தப்போகும் 3 கார்கள் - என்னென்ன தெரியுமா?
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
திருமணத் தடை நீங்கணுமா? மணமாலை சூட வைக்கும் திருவேதிக்குடி வேதபுரீசுவரர்!
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
Embed widget