மேலும் அறிய

"Joint account.. ATM கார்டை கணவர்கள் பகிர்ந்து கொள்வது" இல்லத்தரசிகளின் உரிமை.. உச்ச நீதிமன்றம் தீர்ப்பு!

கணவர்கள், தங்கள் மனைவிகளுக்கு நிதி உதவி செய்வது அவசியம் என உச்ச நீதிமன்றம் கருத்து. Joint account வைத்திருப்பது ATM கார்டை கணவர்கள் பகிர்ந்து கொள்வது இல்லத்தரசிகளின் உரிமை என்றும் தெரிவித்துள்ளது.

குடும்பத்திற்காக இல்லத்தரசிகள் ஆற்றிய இன்றியமையாத பங்கு மற்றும் தியாகங்களை இந்தியாவில் இருக்கும் ஆண்கள் அங்கீகரிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

இல்லத்தரசிகளின் உரிமைகள் என்னென்ன? குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125இன் கீழ் விவாகரத்து பெற்ற இஸ்லாமிய பெண்ணும் தனது முன்னாள் கணவரிடம் இருந்து ஜீவனாம்சம் கோரலாம் என நீதிபதிகள் பி.வி. நாகரத்னா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி ஆகியோர் கொண்ட உச்ச நீதிமன்றம் அமர்வு இன்று அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.

திருமணமான அனைத்து பெண்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் கோருவதற்கான சட்டம் பொருந்தும் என கூறிய நீதிமன்றம், இல்லத்தரசிகளின் உரிமைகளை குறிப்பிட்டு பேசியுள்ளது.

கணவர்கள், தங்கள் மனைவிகளுக்கு நிதி உதவி செய்வது அவசியம் என குறிப்பிட்ட நீதிமன்றம், "குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதற்காக கூட்டு வங்கிக் கணக்குகளை வைத்திருப்பது, ATM கார்டை பகிர்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளது.

வழக்கின் பின்னணி: விவாகரத்து பெற்ற தன்னுடைய மனைவிக்கு மாதந்தோறும் 20,000 ரூபாய் ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என முகமது அப்துல் சமத் என்பவருக்கு குடும்பநல நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது. இதை எதிர்த்து, தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் முகமது அப்துல் சமத் மனு தாக்கல் செய்தார்.

குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவு செல்லும் என தெலங்கானா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும், ஜீவனாம்ச தொகையை 10,000 ரூபாயாக குறைத்தது. இதை எதிர்த்து முகமது அப்துல் சமத் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

இந்த வழக்கில்தான், உச்ச நீதிமன்றம் அதிரடி கருத்துகளை தெரிவித்துள்ளது. வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்கிய நீதிபதி நாகரத்னா, "திருமணமான பெண்களுக்கு மட்டும் அல்லாமல் அனைத்து பெண்களுக்கும் குற்றவியல் நடைமுறைச் சட்டப்பிரிவு 125 பொருந்தும்.

திருமணமான அனைத்து பெண்களுக்கும் அவர்களின் மதத்தைப் பொருட்படுத்தாமல் ஜீவனாம்சம் கோருவதற்கான சட்டம் பொருந்தும். ஜீவனாம்சம் என்பது உதவி அல்ல. ஆனால், திருமணமான பெண்களின் அடிப்படை உரிமை.

இந்த உரிமையானது மத எல்லைகளைத் தாண்டி, திருமணமான அனைத்துப் பெண்களுக்கும் பாலின சமத்துவம் மற்றும் நிதிப் பாதுகாப்பு என்ற கொள்கையை வலுப்படுத்துகிறது. இல்லத்தரசியான மனைவி, உணர்ச்சிப்பூர்வமாக மட்டும் இன்றி வேறு வழிகளிலும் தங்களைச் சார்ந்திருப்பதை சில கணவர்கள் உணர்ந்து கொள்வதில்லை" என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jolarpettai Murder: LIFT-ல் சிக்கிய எம்.பி! 1 மணி நேரம் திக்.. திக்! மயங்கிய காங்.கட்சியினர்”தமிழகத்திற்கு நிதி கிடையாது” தர்மேந்திர பிரதான் பேசியது என்ன? தமிழில் முழு வீடியோNamakkal Transgender Issue : ’’திருநங்கைகளை ஒதுக்காதீங்க’’மக்களுக்கு கலெக்டர் ADVICE | Collector

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
மும்மொழிக்கொள்கையில் இந்தி கட்டாயமில்லை; இதில் என்ன தவறு? – தமிழக அரசுக்கு மத்திய அமைச்சர் பதிலடி
Minister Ponmudi : ”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் அமைச்சர் பொன்முடி..?
”மகனுக்கு 2, மஸ்தானுக்கு மூன்றா?” அதிருப்தியில் பொன்முடி..?
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
அமைச்சர் துரைமுருகனுக்கு என்னாச்சு? மருத்துவமனைக்கு விரையும் ஸ்டாலின், உதயநிதி!
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
விவசாயிகளே... உங்கள் கவனத்திற்கு: வேளாண் துறை ஆலோசனை எதற்கு தெரியுங்களா?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
ரூ.1 கோடி வரை கடன்! காக்கும் கரங்கள் திட்டங்களுக்கு இன்று முதல் விண்ணப்பம்! யாருக்கு என்ன பயன்?
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
பழவந்தாங்கல் ரயில் நிலையத்தில் அதிர்ச்சி - பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த இளைஞர்!
L Murugan :
L Murugan : "யாருடன் கூட்டணி? தாய் மொழிக்கு முக்கியத்துவம்” அடித்து பேசிய எல்.முருகன்..!
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
ADMK ON Dmk: நியாயமா..! வெளியான கடிதம், திமுகவின் இலட்சணம் இதுதானா? PM SHRI விவகாரம், அதிமுக கேள்வி
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.