மேலும் அறிய

Sukanya Samriddhi Yojana: செல்வமகள் சேமிப்புத் திட்டம் பத்தி தெரிஞ்சுக்கணுமா.. இதை படிங்க!

நாளையுடன் (ஜனவரி 22 ஆம் தேதி) செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. இதை முன்னிட்டு இந்த திட்டத்தை பற்றி தெரிந்து கொள்வோம்.

நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான இளம் பெண்களுக்கு நம்பிக்கை மற்றும் அதிகாரம் அளிக்கும் திட்டமாக செல்வமகள் சேமிப்புத் திட்டம் திகழ்கிறது. பெண்களின் கனவுகள், விருப்பங்களுக்கான அரசின் உறுதியான அர்ப்பணிப்பை இந்த திட்டம் எடுத்துக்காட்டுகிறது.

பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம் இயக்கத்தின் ஒரு பகுதியாக பிரதமர் நரேந்திர மோடியால் கடந்த 2015ஆம் ஆண்டு, ஜனவரி 22 ஆம் தேதி இந்த திட்டம் தொடங்கப்பட்டது. நாளையுடன் (ஜனவரி 22 ஆம் தேதி) செல்வமகள் சேமிப்பு திட்டம் தொடங்கப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவு பெறுகிறது. குடும்பங்கள் தங்கள் மகள்களின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய இந்த திட்டம் ஊக்குவிக்கின்றன.

அதன்படி, கடந்த 2024 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம், நிலவரப்படி 4.1 கோடிக்கும் அதிகமான செல்வமகள் சேமிப்பு திட்டக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இது எண்ணிக்கை மட்டுமல்ல, இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் சமமான மற்றும் நம்பிக்கைக்குரிய எதிர்காலத்தை உருவாக்குவதற்கான இயக்கத்தையும் குறிக்கிறது.

செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கை உடனே தொடங்குங்கள்:

பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதை அடையும் வரை இந்த இந்தக் கணக்கைத் தொடங்கலாம். கணக்கைத் தொடங்கும் காலம் முதல் முதிர்ச்சி / கணக்கை நிறைவு செய்யும் காலம் வரை இந்தியாவில் வசிக்கும் எந்தவொரு பெண் குழந்தையும் திட்டத்திற்கு தகுதியுடையவர்கள் ஆவர்‌.

ஒரு குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே அனுமதிக்கப்படும். பெற்றோர்கள் அதிக பட்சமாக தங்களின் இரண்டு பெண் குழந்தைகளுக்கு கணக்குகளைத் தொடங்கலாம். இருப்பினும், இரட்டையர்கள் அல்லது ஒரே நேரத்தில் மூன்று குழந்தைகள் பிறந்திருந்தால் அதிக கணக்குகள் தொடங்க விதிவிலக்கு தரப்படும்.

இந்த கணக்கை இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கணக்கைத் தொடங்குவதற்கு பின்வரும் ஆவணங்கள் தேவை:

•    செல்வமகள் சேமிப்புத் திட்ட கணக்கு தொடங்கும் படிவம்

•    பெண் குழந்தையின் பிறப்புச் சான்றிதழ்

•    அடையாளச் சான்று

•    குடியிருப்புச் சான்று

வைப்புத்தொகை:

பெற்றோர் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்திலும் அல்லது நியமிக்கப்பட்ட வணிக வங்கிக் கிளையிலும் பெண்களுக்கான செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கைத் தொடங்கலாம்.

குறைந்தபட்ச தொடக்க வைப்புத்தொகை ரூ. 250 ஆகும். மொத்த வருடாந்திர வைப்புத்தொகை வரம்பு ரூ.1,50,000 ஆகும். இதற்கு அதிகப்படியான தொகைக்கு வட்டி அளிக்கப்படாது. திருப்பித் தரப்படும். கணக்கு தொடங்கிய நாளிலிருந்து பதினைந்து ஆண்டுகள் வரை வைப்புத்தொகை செலுத்தலாம்.

இதையும் படிக்க: BNS different from IPC: புதிய குற்றவியல் சட்டம் Vs இந்திய தண்டனை சட்டம் - அறிய வேண்டிய முக்கிய விதிகள்

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Ramesh: DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
DMKவினர் தூங்கிக் கொண்டு இருந்தார்களா? பஞ்ச் பேசினார்களே? - அமைச்சர் ரமேஷ் அதிரடி கேள்விகள்
CM Vijay: காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
காவிரி விவகாரம் - கருணாநிதியை குத்திக்காட்டிய விஜய்..! 1969ல் பேசியது என்ன? சட்டமன்ற குறிப்புகள் இதோ..!
CM Vijay: தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
தொகுதி மறுவரையறை ஏன் கூடாது? முதலமைச்சர் விஜய் சொல்லும் காரணங்கள் - DMKவிற்கு செக்?
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
TVK Vijay: அதிமுகவில் இருந்து வந்தவர்களுக்கு முக்கிய பதவிகள்.. விஜய் எடுத்த முடிவு.. கொதிக்கும் தவெக தொண்டர்கள்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
Sekar Babu: சாவின் விளிம்பிலும் ஸ்டாலின் வாழ்க தான்.. கட்சி மாறும் எண்ணமில்லை.. சேகர்பாபு திட்டவட்டம்!
TN Weather News: சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் வெளுத்த மழை, எந்தெந்த மாவட்டங்களுக்கு இன்று வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Kia Seltos CNG: க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
க்ராண்ட் விட்டாரா & ஹைரைடருக்கு சவால் - 28KM மைலேஜ் SUV-யை இறக்கும் கியா - முழு விவரம் இதோ
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
Embed widget