Bharathiyar | பாரதியார் பெயரில் தமிழ் ஆய்வு இருக்கை - பிரதமர் மோடி அறிவிப்பு
தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் 100ஆவது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அவரது நினைவு நாளையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் பிற கட்சி தலைவர் பாரதியாரின் சிலைக்கும் உருவ படத்திற்கு பூதூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிலையில், பாரதியாரிடன் நினைவு நாளை முன்னிட்டு வாரணாசி பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் என்றும், தமிழ் படிப்புகள் தொடர்பாக பாரதியார் பெயரில் ஆய்வு இருக்கை அமைக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.
உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. pic.twitter.com/9SwEIfSwfB
‘உலகின் மிகப் பழமையான மொழியான தமிழின் தாயகம் என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது.
இன்று, சுப்பிரமணிய பாரதியின் 100 வது நினைவு நாளில் அவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக காசியின் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தமிழுக்கான சுப்பிரமணிய பாரதி அமர்வை நிறுவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது’ என்று பிரதமர் நரேந்திர மோடியின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
India is proud to be home to the world's oldest language, Tamil.
— Narendra Modi (@narendramodi) September 11, 2021
Today, on the 100th Punya Tithi of Subramania Bharati, honoured to announce the setting up of the Subramania Bharati Chair of Tamil studies at BHU, Kashi. pic.twitter.com/kx1bv2S6AQ
Subramania Bharati chair on Tamil Studies to be set up in Faculty of Arts at Banaras Hindu University for research fellows, students..: PM Narendra Modi pic.twitter.com/rYeCBjUk5S
— ANI (@ANI) September 11, 2021