மேலும் அறிய

பாலியல் பிரச்சினை.. மருந்து வாங்க போய் ரூ.48 லட்சத்தை இழந்த நபர்!

தனது கடையில் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன் விலை 1 கிராம் ரூ.1.60 லட்சம் எனவும், இதனை ரொக்கமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நானும் என்னுடைய பிரச்னை தீர்ந்தால் போதும் என நினைத்து அதனை வாங்கினேன். 

கர்நாடகா மாநிலத்தில் பாலியல் பிரச்னை தீர மருந்து வாங்க சென்று ரூ.48 லட்சம் மோசடியில் இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக போலீசில் அளித்துள்ள புகாரின்படி, “கடந்த மே 3ம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றதாக குறிப்பிட்டுள்ளார். மென்பொருள் பொறியாளரான தான் சாலையில் சென்று கொண்டிருந்தேன். அப்போது பாலியல் பிரச்னைகளுக்கான விரைவான தீர்வுகள் என்ற பெயரில் ஒரு விளம்பரம் கண்டேன். அங்கு சென்று என்னவென்று பார்த்தபோது அங்கிருந்தவர் என்ன பிரச்னை என விசாரித்தார். நான் அவரிடம் என்னுடைய பிரச்னையை தெரிவித்தேன். விஜய் குருஜி என்ற எங்களுடைய ஆயுர்வேத மருத்துவரால் குணப்படுத்த முடியும் என அவரிடம் அழைத்துச் சென்றார். 

விஜய் குருஜி என்னை பரிசோதனை செய்து விட்டு தேவராஜ் பூட்டி என்ற ஆயுர்வேத மருந்தை பரிந்துரைத்தார். அது தனது கடையில் மட்டுமே கிடைக்கும் என்றும், அதன் விலை 1 கிராம் ரூ.1.60 லட்சம் எனவும், இதனை ரொக்கமாக மட்டுமே கொடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். நானும் என்னுடைய பிரச்னை தீர்ந்தால் போதும் என நினைத்து அதனை வாங்கினேன். 

அதன்பிறகு விஜய் குருஜி தன்னுடைய இன்னொரு தயாரிப்பான பவன் பூட்டி என்ற எண்ணெயை மறுவாரம் கொடுத்தார். அதன் விலை ரூ.76 ஆயிரம் என கூறி பெற்றுக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்து சில வாரங்களில் குருஜி அறிவுறுத்தலின்படி ரூ.17 லட்சம் மதிப்புள்ள மருந்துகளை எனக்கு வழங்கினார். நான் மறுத்த நிலையில் ஒரு கட்டத்தில் என்னை வற்புறுத்தி தேவராஜ் ரசபூட்டி என்ற மற்றொரு பொருளை ஒரு கிராமுக்கு ரூ.2,60,000 விலையில் வாங்கும்படி  கூறினார்.  அதற்காக என்னுடைய நண்பரிடமிருந்து ரூ.10 லட்சம் கடன் வாங்கினேன். மொத்தத்தில், அந்த  ஆயுர்வேதக் கடையில் சுமார் ரூ.48 லட்சம் செலவிட்டேன்.

ஆனால் குருஜி சொன்ன மருந்துகளை எடுத்துக் கொண்ட பின்பு என்னுடைய பிரச்னைகளுக்கு எந்தவித தீர்வும் கிடைக்கவில்லை. அதுமட்டுமல்லாமல் அந்த மருந்துகளை சாப்பிட்டதால் எனக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டது. இதுதொடர்பாக விஜய் குருஜியை தொடர்புக் கொண்டு புகார் தெரிவித்தபோது அவர் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார். மேலும் இந்த மருத்துவ சிகிச்சையை நிறுத்தினால் உடல் நிலை மோசமடைய கூடும், இதனால் உயிரிழப்புகள் கூட நிகழலாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார். எனவே என்னை ஏமாற்றிய விஜய் குருஜி மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்ததாக சொல்லப்படுகிறது. 

மேலும் பாதிக்க மென்பொறியாளர் 2023ம் ஆண்டு திருமணத்திற்கு பிறகு பாலியல் ரீதியான உடல் நல பிரச்னைகளை அனுபவிக்க தொடங்கியதும், இதற்காக கங்கேரியில் உள்ள பல்நோக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததும் கண்டறியப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் விஜய் குருஜி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Embed widget