அழகிய புகைப்படத்துடன் பொங்கல் வாழ்த்து சொன்ன அமைச்சர் ஸ்மிருதி இராணி... ஹார்ட்டின் செய்த சோனு சூட்!
அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார். அதற்கு பல்வேறு பிரபலங்களும் லைக் செய்து கமெண்ட் செய்திருந்தனர்
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இன்று அறுவடைத் திருநாளாம் பொங்கல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. வடக்கே இது மகர சங்கராந்தியாக கொண்டாடப் படுகிறது. மகர சங்கராந்தி தினத்தையொட்டி பல்வேறு தலைவர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தனர். அந்த வரிசையில் மத்திய மகளிர் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்துகளைப் பகிர்ந்திருந்தார். அதற்கு பல்வேறு பிரபலங்களும் லைக் செய்து கமெண்ட் செய்திருந்தனர். கமெண்ட்கள் வரிசையில் நடிகர் சோனு சூட்டும் அமைச்சரின் வாழ்த்துக்கு அன்பு தெரிவித்து கமெண்ட் செய்திருந்தார்.
View this post on Instagram
இராணி அவரது வாழ்த்தில், “இது வாழ்க்கை எனும் வட்டத்தைக் கொண்டாடும் தினம். இந்த மகர சங்கராந்தி தினம் நமக்கும் நம்மைச் சார்ந்தோருக்கும் போதுமான வளத்தை ஆசீர்வதிக்கிறது. எல்லாம் வல்ல சர்வம் உங்கள் ஒவ்வொரு அறம்சார்ந்த செயலிலும் நிலைத்திருக்கட்டும். அன்னபூரணி உங்களது பாத்திரங்களை சுபிட்சமாக்கட்டும். சூரியன் உங்கள் வாழ்வில் உங்களை பாதிக்கும் எதையும் அகற்றட்டும். இதுதான் இந்த நாளில் உங்களுக்கான என் வாழ்த்து” எனக் குறிப்பிட்டிருந்தார். அவரது புகைப்படத்துடன் அவரது வாழ்த்தை அவர் பகிர்ந்திருந்தார். ஸ்மிருதி இராணியின் மகளுக்கு அண்மையில்தான் திருமணம் நிச்சயமானது. அதுகுறித்த புகைப்படங்களையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram