அதிர்ச்சி... ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் இறந்த நிலையில் கண்டெடுப்பு... என்ன நடந்தது?
ஜம்முவில் ஒரு வீட்டில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர்.
ஜம்முவில் ஒரு வீட்டில் இன்று ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சந்தேகத்திற்கிடமான முறையில் இறந்து கிடந்தனர். இதை காவல்துறையினர் உறுதி செய்துள்ளனர்.
Six members of a family found dead at their residence in Sidra area of Jammu. Details awaited: J&K Police
— ANI (@ANI) August 17, 2022
உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டவர்கள் சகினா பேகம், அவரது இரு மகள்கள் நசீமா அக்தர் மற்றும் ரூபினா பானோ, மகன் ஜாபர் சலீம் மற்றும் இரு உறவினர்கள் நூர் உல் ஹபீப் மற்றும் சஜாத் அகமது என அடையாளம் காணப்பட்டுள்ளனர் என காவல்துறையினர் தி பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர்.
ஜம்முவின் சித்ரா பகுதியில் உள்ள குடும்பத்தினரின் வீட்டில் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. உடல்கள் நகரிலுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழுவினர், சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Six members of a family found dead under suspicious circumstances at their home in Jammu's Sidhra locality: Police
— Press Trust of India (@PTI_News) August 17, 2022
இரண்டு சடலங்கள் ஒரு வீட்டிலும் நான்கு சடலங்கள் இரண்டாவது வீட்டிலும் கண்டெடுக்கப்பட்டதாக ஏஎன்ஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. இதற்கிடையில், இந்த உடல்களில் தோட்டாக் காயங்கள் எதுவும் இல்லை என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறை தரப்பில், "உயிரிழந்த அனைவரும் காஷ்மீரை சேர்ந்தவர்கள். அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணை குழு அமைக்கப்படும் என தெரிகிறது" என்றார்.
மருத்துவ கல்லூரியின் மருத்துவர் செய்தியாளர்களிடம் இதுகுறித்து பேசுகையில், "உடற்கூறாய்வுக்கு பிறகே அவர்களின் இறப்புக்கான காரணம் குறித்து தெரியவரும். இறந்தவர்களின் குடும்பத்தார் ஜம்முவிற்கு வந்த பிறகு உடற்கூறாய்வு நடத்தப்படும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்