Eknath Shinde: ஜோக் அடிச்சது குத்தமா? காமெடியனை ரவுண்டு கட்டும் ஏக்நாத் டீம், ஸ்டூடியோ சூறையாடல்
Eknath Shinde: மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே குறித்து, ஸ்டேண்ட்-அப் காமெடியனான குனால் கம்ரா சொன்ன கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Eknath Shinde: ஏக்நாத் ஷிண்டே தொடர்பான கருத்தை அடுத்து குனால் கம்ராவிற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மிரட்டல்கள் குவிந்த வண்ணம் உள்ளன.
மகாராஷ்டிராவில் பரபரப்பு
மகாராஷ்டிர துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டே குறித்த கருத்துக்களுக்காக , ஸ்டாண்ட்-அப் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் . கூர்மையான அரசியல் நையாண்டிக்கு பெயர் பெற்ற காம்ரா, தனது அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் ஒரு காணொலியைப் பதிவேற்றினார். அதில் அவர் ஷிண்டேவை "துரோகி" என்று குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ ஷிண்டே தலைமையிலான சிவசேனா பிரிவின் ஆதரவாளர்களிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது நகைச்சுவை நடிகருக்கு எதிராக போராட்டங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது.
ஸ்டூடியோ சூறையாடல்:
வீடியோ வைரலானதை தொடர்ந்து கம்ரா வீடியோவை படமாக்கியதாகக் கூறப்படும், ஸ்டுடியோவை ஏக்நாத் ஷிண்டே தரப்பு சிவசேனா கட்சியினர் சூறையாடினார். இதுதொடர்பான வீடியோக்களில், நகைச்சுவை நடிகரின் கருத்துக்களுக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தும் வகையில், போராட்டக்காரர்கள் நாற்காலிகள், மேசைகள் மற்றும் விளக்குகளை அடித்து நொறுக்கினர். இதனிடையே, காம்ரா மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரி சிவசேனா தொண்டர்கள் வீதிகளில் இறங்கினர். காவல்நிலையத்தில் புகார்களும் அளிக்கப்பட்டுள்ளன.
Heres the small part of the video for which Habitat Mumbai was Ransacked by goons after @kunalkamra88's latest youtube video. https://t.co/6GEyJg37Oo pic.twitter.com/O1v3osqxtw
— Mohammed Zubair (@zoo_bear) March 23, 2025
சிவசேனா கட்சியினர் மிரட்டல்
இதுதொடர்பாக சிவசேனா செய்தித் தொடர்பாளர் கிருஷ்ணா ஹெக்டே, கம்ராவின் கருத்துக்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, அவர் எதிர்வினைகளைச் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும் என்றும் எச்சரித்தார். "எங்கள் தலைவருக்கு எதிரான இத்தகைய அறிக்கைகளை எந்தக் கட்சித் தொண்டரும் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்பதால், அவருக்கு சிவசேனா பாணி பதில் கிடைக்கும்" என்று ஹெக்டே கூறினார். இந்த எச்சரிக்கை பதட்டங்களை மேலும் அதிகரித்துள்ளது, அதிகரித்து வரும் சீற்றத்திற்கு கம்ரா இன்னும் பகிரங்கமாக பதிலளிக்கவில்லை.
மேலும், “சிலரிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வேலை செய்யும் காம்ரா, மகாராஷ்டிராவில் மட்டுமல்ல இந்தியாவில் எங்கேயும் சுதந்திரமாக நடமாட முடியாது” என சிவசேனா எம்.பி., நரேஷ் ம்ஹேஷ்க் எச்சரித்துள்ளார்.
#WATCH | Mumbai: Shiv Sena (Eknath Shinde faction) workers vandalised Habitat Comedy Club in Khar after comedian Kunal Kamra's remarks on Maharashtra DCM Eknath Shinde here sparked backlash. (23.03)
— ANI (@ANI) March 24, 2025
Source: Shiv Sena (Eknath Shinde faction) pic.twitter.com/L8pkt0TLM6
உத்தவ் தரப்பு விமர்சனம்:
ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் நாசவேலைக்கு எதிர்வினையாற்றிய சிவசேனா UBT தலைவர் ஆதித்ய தாக்கரே, “நகைச்சுவை நடிகர் காம்ரா, ஏக்நாத் மிந்தே (அடிபணிந்த நபர்) பற்றிய ஒரு பாடலை வெளியிட்ட நகைச்சுவை நிகழ்ச்சி மேடையை மைந்தேவின் கோழை கும்பல் உடைக்கிறது. அந்த நகைச்சுவை பாடலில் சொல்லப்பட்டு இருப்பது 100% உண்மை. ஒரு பாதுகாப்பற்ற கோழை மட்டுமே ஒருவரின் பாடலுக்கு எதிர்வினையாற்ற முடியும்" என விமர்சித்துள்ளார்.





















