மேலும் அறிய

"நாக்கை வெட்டுனா 11 லட்சம் தரேன்" மிரட்டல் விடுத்த எம்எல்ஏ.. ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்தா? 

ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என சிவசேனா எம்எல்ஏ பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

ராகுல் காந்தியின் நாக்கை யார் வெட்டினாலும் 11 லட்சம் ரூபாய் தரப்படும் என சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் அறிவித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

எம்எல்ஏ பேசியது என்ன? அமெரிக்காவுக்கு சென்றிருந்த ராகுல் காந்தி இடஒதுக்கீடு குறித்து பேசியதற்கு சிவசேனா எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் கடுமையாக எதிர்வினையாற்றியுள்ளார். "ராகுல் காந்தி தனது சமீபத்திய அமெரிக்க பயணத்தின் போது, ​​இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டுவருவது பற்றி பேசினார்.

இடஒதுக்கீட்டை இயல்பாகவே எதிர்க்கும் மனநிலையை இது காட்டுகிறது. இது காங்கிரஸின் உண்மை முகத்தை அம்பலப்படுத்தியுள்ளது. ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம் ரூபாய் பரிசு வழங்குவேன். தேர்தலில் டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரை காங்கிரஸ் தோற்கடித்துள்ளது.

ராகுல் காந்தியின் கருத்துக்கள் மக்களுக்கு செய்யும் மிகப்பெரிய துரோகம். மராத்வாடா, தங்கர், ஓபிசி போன்ற சமூகத்தினர் இடஒதுக்கீடு கோரி போராடுகிறார்கள். ஆனால், அதற்கு முன்பே அதன் பலன்களை முடிவுக்கு கொண்டு வருவதை பற்றி ராகுல் காந்தி பேசுகிறார்.

அரசியல் சாசனப் புத்தகத்தைக் காட்டி, பாஜக அதை மாற்றிவிடும் என்று போலிக் கதையைப் பரப்பி வந்தார் ராகுல் காந்தி. ஆனால், நாட்டை 400 ஆண்டுகள் பின்னோக்கி கொண்டு செல்ல திட்டமிட்டது காங்கிரஸ் தான்" என்றார்.

ராகுல் காந்தி உயிருக்கு ஆபத்தா? ராகுல் காந்தி குறித்து எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் பேசிய கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அவரின் கருத்துகளை ஆதரிக்கவில்லை கூட்டணி கட்சியான பாஜக விளக்கம் அளித்துள்ளது. இதுகுறித்து மகாராஷ்டிர பாஜக தலைவர் சந்திரசேகர் பவன்குலே கூறுகையில், "கெய்க்வாட்டின் கருத்துகளை நான் ஆதரிக்கவில்லை.

ஆனால், முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இடஒதுக்கீடு முன்னேறுவதைப் பாதிக்கும் என்று எதிர்த்ததை நாம் மறந்துவிட முடியாது. இடஒதுக்கீடு வழங்குவது என்பது முட்டாள்களை ஆதரிப்பது என்று ராஜீவ் காந்தி கூறியிருந்தார். இப்போது ராகுல் காந்தி, இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டுவருவதாகக் கூறுகிறார்.

எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசியினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவோம். நேரு, ராஜீவ் காந்தி, ராகுல் காந்தி ஆகியோரின் கருத்துகளைப் பற்றி அவர்களுக்குத் தெரிவிப்போம். மராட்டிய இடஒதுக்கீடு ஆர்வலர் மனோஜ் ஜராங்கே இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்" என்றார்.

ராகுல் காந்தியை நாட்டின் நம்பர் 1 பயங்கரவாதி என்றும் அவர் இந்தியரே இல்லை என்றும் மத்திய அமைச்சரும் பஞ்சாப் மாநில பாஜக தலைவர்களில் ஒருவருமான ரவ்னீத் சிங் பிட்டு நேற்று தெரிவித்திருந்தது சர்ச்சையை கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்Allu Arjun Vs Revanth Reddy : ”வெறும் சினிமாக்காரன்..நாட்டுக்கா போராடுனாரு?”ரேவந்த் vs அல்லு அர்ஜுன்!Gukesh Dommaraju Profile : குருவை மிஞ்சிய சிஷ்யன்?சொல்லி அடித்த 7 வயது சிறுவன்!யார் இந்த குகேஷ்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"எனக்கு அஜெண்டா இருக்கு" திருமாவுக்கு பறந்த கடிதம்.. ரகசியத்தை உடைத்த ஆதவ் அர்ஜுனா!
"அடுத்த ஆட்சி வேற மாறி இருக்கும்" ஸ்கெட்ச் போடும் இபிஎஸ்!
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
எல்லை மீறிய மைத்துனர்.. ஏற்க மறுத்த இளம்பெண்.. உடலை பீஸ் பீஸாக வெட்டி தூக்கி எறிந்த கொடூரம்
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
TVK vs DMK: விஜய்க்காக விட்டுக்கொடுக்கும் அ.தி.மு.க.? இடைத்தேர்தலில் தி.மு.க.வுடன் மல்லுகட்டுமா தவெக?
"யப்பா" - 2 MATHS PERIOD: அமித்ஷாவின் ரியாக்ஷனை வைத்து மோடியை கலாய்த்த பிரியங்கா காந்தி
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
TN Rain Alert: உருவாகிறது..குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி - தமிழ்நாட்டில் மழை இருக்கா?
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
உங்களுக்கு நான் இருக்கேன்: இபிஎஸ் போடும் கணக்கு; நிர்வாகிகளுக்கு கொடுத்த அட்வைஸ்
Premalatha Vijayakanth:
Premalatha Vijayakanth: "விஜய் முதலில் தன்னை நிரூபிக்கட்டும்” ”வாய்சவடால் மட்டும் இருக்கக்கூடாது” -பிரேமலதா விஜயகாந்த்.
Embed widget