மேலும் அறிய

Sensodyne Naaptol Ads: "உலகம் முழுவதுமுள்ள டென்டிஸ்டுகளால் பரிந்துரைக்கப்படுகிறது" - சென்சோடைன் விளம்பரங்களுக்கு தடை!

"மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிவாரணம்", "60 வினாடிகளில் வேலை செய்கிறது" ஆகிய கூற்றுகளை ஆய்வு செய்து 15 நாள்களுக்குள் ரிப்போர்ட் சமர்ப்பிக்க இயக்குநர் ஜெனரலுக்கு சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம்(CCPA),GlaxoSmithKline (GSK) Consumer ஹெல்த்கேர் லிமிடெட் நிறுவனத்தின் சென்சோடைன் பற்பசை தயாரிப்பு விளம்பரங்கள் விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டப்பட்டு இந்தியாவில் அதன் விளம்பரங்களை நிறுத்திட உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதவிர, போலி விளம்பரங்கள் மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளை மேற்கொண்டதற்காக நாப்டோல் ஆன்லைன் ஷாப்பிங் லிமிடெட் நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து சிசிபிஏ தானாக முன்வந்து விசாரணை நடத்தி, GlaxoSmithKline (GSK) நிறுவனத்தின் மீது ஜனவரி 27 அன்றும், Naaptol நிறுவனத்தின் மீது பிப்ரவரி 2 அன்றும் உத்தரவு பிறப்பித்துள்ளதாக நுகர்வோர் விவகார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. அந்த உத்தரவின்படி, இந்தியாவில் ஒலிபரப்பப்படும் அனைத்து சென்சோடைன் விளம்பரங்களையும் ஏழு நாள்களுக்குள் நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Sensodyne Naaptol Ads:

சென்சோடனை விளம்பரத்தில் இடம்பெற்ற "உலகம் முழுவதுமுள்ள பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் பேஸ்ட்" என்னும் வசனத்தை ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தியாவில் பல் மருத்துவர்கள், எந்தவொரு தயாரிப்புக்கோ அல்லது மருந்துக்கோ பகிரங்கமாக ஒப்புதல் அளிப்பது விதிமுறைகளுக்கு எதிரானது ஆகும். இந்த விதிமுறையை சுட்டிகாட்டிய ஆணையம், இந்தியாவில் நடைமுறையில் உள்ள சட்டத்தைத் மாற்றவோ, பல் குறித்த நுகர்வோர் அச்சத்தைப் போக்கிட வெளிநாட்டு பல் மருத்துவர்களைக் காட்டவும் அனுமதிக்க முடியாது.

எனவே, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 பிரிவு 2 (28) - இன் படி "இந்தியாவிற்கு வெளியே உள்ள பல் மருத்துவர்களின் ஒப்புதல்களை காட்டும் விளம்பரம் தவறானது" என பட்டியலிடப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. "உலகளவில் பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட உலகின் நம்பர்.1 சென்சோடைன் பேஸ்ட்” மற்றும் "மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிவாரணம்", "60 வினாடிகளில் வேலை செய்கிறது" போன்ற கூற்றுகள் குறித்து ஆய்வு செய்து 15 நாள்களுக்குள் ரிப்போர்ட் சமர்ப்பிக்க இயக்குநர் ஜெனரலுக்கு சிசிபிஏ உத்தரவிட்டுள்ளது.

Sensodyne Naaptol Ads:

இதுதொடர்பாக அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், "சிசிபிஏ-இன் உத்தரவு எங்களுக்கு கிடைத்துள்ளது. நாங்கள் பின்பற்றிய விளம்பர யுக்தி, சட்டங்கள் மற்றும் தொழில்துறை வழிகாட்டுதல்களுடன் இணங்குகிறது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம். நாங்கள் பொறுப்பாகவும், வாடிக்கையாளர்களின் நலனுக்காகவும் உறுதிபூண்டுள்ளோம்" என தெரிவித்துள்ளது.

மற்றொரு வழக்கில், Naaptol Online Shopping Ltd நிறுவனத்திற்கு எதிராக சிசிபிஏ நோட்டீஸ் அனுப்பியது. அதில், “Set of 2 Gold Jewelry”, “Magnetic Knee Support” and “Acupressure Yoga Slippers” போன்ற தவறான விளம்பரங்களை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது. இதுதவிர, அந்நிறுவனத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மொழிகளில் 24X7 சேனலை நடத்துவதால் , தவறான விளம்பரங்கள் நுகர்வோர் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். டிவியில் ஒளிப்பரப்படும் விளம்பரங்கள் ரெக்கார்ட் செய்யப்பட்டவை என்றும், நேரடி ஒளிப்பரப்பு கிடையாது என்பதையும் நாப்டால் குறிப்பிடவேண்டும் என ஆணையம் அறிவிறுத்தியுள்ளது. இதுதவிர, தயாரிப்புகளின் பொய்யான டிமாண்ட் வைத்து விளம்பரங்களை பதிவிட தடை விதித்துள்ளது. உதாரணமாக, "இந்த தயாரிப்பை இன்று ஒரே நாள் மட்டுமே வாங்க முடியும்", "5 மணிக்குள் மட்டுமே வாங்கிட முடியும்" போன்ற விளம்பரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget