மேலும் அறிய

இளம் விஞ்ஞானிகளை தேடும் அறிவியல் திறனறி தேர்வு - அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

’’மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறி தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது’’

மாணவர்களிடையே இளம் விஞ்ஞானிகளைத் தேடும் அறிவியல் திறனறி தேர்வு வரும் நவம்பர் 30, டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடக்கிறது. இத்தேர்வில் பங்கேற்க வரும் அக்டோபர் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரச்சார் நிறுவனம், விபா நிறுவனம், என்சிஇஆர்டி இணைந்து, பள்ளி மாணவர்களுக்கு தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வை நடத்தி வருகிறது. இத்தேர்வு இந்தியா முழுவதும் செவ்வாய் மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இணைய வழியில் நடைபெறும். இளம் விஞ்ஞானிகளைத் தேடும் இத்தேர்வை ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி மூலம் ஆன்லைனில் தங்கள் வீடுகளில் இருந்தே எழுதலாம். தமிழ், ஆங்கிலம் மற்றும் பிற பிராந்திய மொழிகளிலும் எழுதலாம்.

இந்தத் தேர்வு குறித்து புதுச்சேரி வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், புதுவை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருண் நாகலிங்கம் மற்றும் காரைக்கால் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தட்சணாமூர்த்தி ஆகியோர் கூறுகையில் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டவும் புதிய கண்டுபிடிப்புகளில் அவர்கள் ஈடுபட வழிகாட்டவும் இந்தத் தேர்வு மிகவும் உதவியாக இருக்கும். ஆறாவது வருடமாக இந்தாண்டு தேர்வு நடைபெறுகிறது. இதில் தேர்ச்சி பெறும் மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளுடன் உரையாடுவதற்கும் அவர்களுடன் சில செயல்பாடுகளில் ஈடுபடவும் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது.

இளம் விஞ்ஞானிகளை தேடும் அறிவியல் திறனறி தேர்வு - அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

வரும் அக்டோபர் 31 வரை 100 செலுத்தி தனியாகவோ அல்லது பள்ளி மூலமாகவோ  www.vvm.org.in  என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். இந்த ஆண்டிற்கான தேர்வு நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 5 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது.

இத்தேர்வில் 6 முதல் 11 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பங்குபெறலாம். 6 முதல் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஒரு பிரிவும் 9 முதல் 11 வகுப்பு வரையிலான மாணவர்கள் மற்றொரு பிரிவாகவும் பிரிக்கப்படுவர். தேர்வுக்கு முன்னர் இரண்டு மாதிரித் தேர்வுகள் நடைபெறும். மாணாக்கர்கள் வார இறுதி நாள்களில் அவற்றை எழுதிப்பார்க்கலாம்.

மாணவர்கள் தேர்வில் பெறும் மதிப்பெண்ணின் அடிப்படையில் பரிசு மற்றும் சான்றிதழ் அளிக்கப்படும். குறிப்பாக, மாவட்ட அளவில் (6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) ஒவ்வொரு வகுப்புக்கும் 3 பேர் வீதம் 18 பேர் தேர்ந்தெடுக்கப்படுவர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்படும். மண்டல அளவில் தேர்ச்சி பெற்றவர்கள் அருகில் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர்.

தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வுத் தேர்வு தொடர்பாக தகவல் குறிப்புகளை புதுச்சேரி வித்யார்த்தி விஞ்ஞான் மந்தனின் மாநில ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன், தமிழக ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி ஆகியோர் கல்வித்துறை இயக்குநர் ருத்ர கவுடுவிடம் அளிக்கிறார்கள். மாநில அளவில் ஒவ்வொரு வகுப்பிலும் 20 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு 120 பேர் இரண்டாம் கட்டத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். அத்தேர்வு செயல்முறை வடிவில் அமைந்திருக்கும். இதில் தேர்வு செய்யப்படும் 120 மாணாக்கர்களுக்கும் சான்றிதழ்கள், கேடயங்கள் வழங்கப்படும். 120 மாணவர்களில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு, ரொக்கப்பரிசாக முறையே ரூ.5000, ரூ.3000, ரூ,2000 வழங்கப்படும்.

இளம் விஞ்ஞானிகளை தேடும் அறிவியல் திறனறி தேர்வு - அக்டோபர் 31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தேசிய அளவிலான ஓர் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாநில அளவில் தேர்வு பெறும் மாணவர்கள் அழைத்துச் செல்லப்படுவர். தேசிய அளவிலான தேர்வுக்கு ஒவ்வொரு வகுப்பிலும் (6 முதல் 11 ஆம் வகுப்பு வரை) மாநில அளவில் முதல் 2 இடங்களை பெறும் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான முகாமிற்கு அழைக்கப்படுவார்கள். தேசிய அளவில் கலந்து கொள்பவர்களுக்குச் சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்படும்.

தேசிய அளவிலான முகாமில் நடைபெறும் பல்வேறு வகையான அறிவியல் சார் நிகழ்வுகளில் பங்கேற்பர். அதில் சிறப்பாகத் திறமைகளை வெளிப்படுத்திய மாணாக்கர்களில் ஒவ்வொரு வகுப்பில் இருந்தும் 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டுச் சான்றிதழ்கள், கேடயங்கள் மற்றும் முதல், இரண்டாம், மூன்றாம் இடம் பெறும் மாணவர்களுக்கு முறையே ரூ.25,000, ரூ.15,000, ரூ.10000 ரொக்கப்பரிசு வழங்கப்படும். தேசிய மண்டல அளவிலும் ஒவ்வொரு வகுப்பிலும் சிறப்பாகச் செய்த மாணவர்களுக்கு ரூ.5000, ரூ.3000, ரூ,2000 என ரொக்கப்பரிசு வழங்கப்படும். இவர்கள் தேசிய அளவிலான ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அழைத்துச் செல்லப்படுவர்.

அனைத்து மாணாக்கர்களும் ஒவ்வொரு விஞ்ஞானி அல்லது ஆராய்ச்சியாளருடன் இணைக்கப்பட்டு அவர்கள் படிக்க, கருத்துகளைத் தெரிந்துகொள்ள வழிகாட்டப்படுவார்கள். கூடுதல் தகவல் மற்றும் சந்தேகங்களுக்கு 9443302944 மற்றும் 9894926925 ஆகிய எண்களைத் தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
Manmohan Singh Death: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார் - துடித்துப்போன அரசியல் தலைவர்கள் - மனமுடைந்து இரங்கல்
TVK Vijay:
TVK Vijay: "பனையூர் பண்ணையார், வொர்க் ப்ரம் ஹோம் அரசியல்வாதி" பதிலடி தருவாரா விஜய்?
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: தத்தளித்த இந்திய பொருளாதாரம், கரையேற்றிய மன்மோகன் சிங் - ”எல்பிஜி” ரீஃபார்ம், லைசன்ஸ் ராஜ் ரத்து
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: மன்மோகன் சிங்கின் கடைசி செய்தியாளர் சந்திப்பு - ”என்னைப் பற்றி வரலாறு சொல்லும்” சொன்னது உண்மையா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh: வளர்ச்சியே மூச்சு..! இன்றைய இந்தியாவிற்கு, அன்றே அடித்தளம் போட்ட மன்மோகன் சிங் - இவ்வளவு சீர்திருத்தங்களா?
Manmohan Singh Death: நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
நவீன இந்தியாவின் சிற்பி.. முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார்!
Anna University Issue:
"ஞானசேகரன் மட்டுமே குற்றவாளி" அண்ணா பல்கலை. விவகாரம்.. சென்னை கமிஷனர் அருண் பரபர தகவல்!
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Embed widget