மேலும் அறிய

Divya Sathyaraj: மணிப்பூர் மக்களுக்கான மறுவாழ்வுப் பணிகள்... நிதி திரட்டும் சத்யராஜ் மகள் திவ்யா!

மணிப்பூர் மக்கள் மறு வாழ்வுக்காக சத்யராஜ் மகள் திவ்யா நிதி திரட்டுகிறார்.

நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் வன்முறைகளால் பாதிக்கப்படும் மக்கள் மறுவாழ்வு பணிகளில் ஈடுபடுவதில் ஆர்வமுடையவர். இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ்ப்பாணம் பகுதிக்குச் சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். இப்போது மணிப்பூர் கலவரத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மறுவாழ்வு வழங்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

மணிப்பூர் மாநிலத்தில் மே 3ஆம் தேதி குக்கி மற்றும் மெய்தி இனக் குழுவினருக்கிடையே தொடங்கிய இன மோதல் வன்முறை சம்பவங்களாக மாறியது. மோதல் தொடங்கி மூன்று மாதங்கள் ஆகியுள்ள நிலையில் மணிப்பூரில் மனித உரிமை மீறல்களும் வன்முறை வெறியாட்டங்களும் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.

எண்ணற்ற குடும்பங்கள் இடம்பெயர்ந்து, சமூகங்கள் சிதைந்துள்ளன. இந்நிலையில், திவ்யா சத்யராஜ் இது குறித்து கூறுகையில்,  ”மணிப்பூரில் இடம் பெயர்ந்தவர்களுக்கு நேரடி ஆதரவை வழங்குவதற்கான நம்பகமான வழியைக் கண்டறிய நானும் எனது தோழி காவ்யா சத்தியமூர்த்தியும் விரிவான ஆராய்ச்சியை மேற்கொண்டோம். 

மணிப்பூரில் உள்ள தன்னார்வ தொண்டு நிறுவனமான யா-ஆலின் நிறுவனம் சர்வதேச அளவில் பாராட்டப்பட்டது. இதன் நிறுவனர் மனித உரிமைப் பாதுகாவலரான சதாம், மனித உரிமைகள் மற்றும் சமூக நீதிக்காக வாதிட்டு, மாற்றத்தின் முன்னணியில் இருந்து வருகிறார். அவருடன் இணைந்து தற்போது மணிப்பூரின் இடம் பெயர்ந்த மக்களுக்கு மறுவாழ்வு அளிக்க நிதி திரட்டும் பிரசாரத்தை தொடங்கி உள்ளோம்.

இந்தப் பிரசாரம் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு உணவு, தங்குமிடம், உடை மற்றும் மிகவும் தேவையான மருத்துவ உதவிகளை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது. நான் இந்த மாதம் இவர்களுக்கு 25 ஆயிரம்  ரூபாய் பங்களித்துள்ளேன். வரும் மாதங்களில் மேலும் வழங்க உள்ளேன். மணிப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையில் உண்மையான தாக்கத்தை ஏற்படுத்த அனைவரும் கைகோர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இந்திய நன்கொடையாளர்களுக்கு வரி விலக்குகள் கிடைக்கும். இந்த முக்கியமான முயற்சிக்கு ஆதரவளிக்க அனைத்து தரப்பினரையும் வேண்டுகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க

DA Hike: ஒரு கோடி அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்... விரைவில் அகவிலைப்படி உயர்வு.. மத்திய அரசு அதிரடி திட்டம்..!

Pakistan Train Accident: அச்சச்சோ..! ரயில் கவிழ்ந்து கோர விபத்து, பாகிஸ்தானில் 22 பேர் பலி, 80 பேர் காயம்..

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
வந்தாச்சு லீவு; நாளை பள்ளிகள், கல்லூரிகள், அலுவலகங்களுக்கு அரசு விடுமுறை- எங்கே? எதற்கு?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்னை மாநகராட்சியின் அசத்தல் ஐடியா! வருகிறது AI டெக்னாலஜி! யாரும் தப்ப முடியாது!
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Chennai Udhayam Theatre: சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
Zelenskyy vs Trump: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
Embed widget