மேலும் அறிய

சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

சபரிமலையில், திருமுற்றம் மற்றும் சன்னிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது.

சபரிமலையில் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நெரிசலற்ற தரிசனத்துக்காகவும் கூட்டுப் படைப்பிரிவுகள் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. மேலும் இன்று இரவு வரை பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.


சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

சபரிமலையில் பல்வேறு துணை ராணுவப் படைகள் சார்பில் நேற்று முதல் கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி சன்னிதானம், பம்பை, நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக துணை ராணுவத்தின் பல்வேறு படை பிரிவுகள் சபரிமலைக்கு வந்துள்ளன. இன்று (டிச.6) கூடுதல் பாதுகாப்புகளுக்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பான தரிசனத்தை உறுதிப்படுத்தும் வகையில் இந்த கூட்டு படைபிரிவுகள் சார்பில் அணிவகுப்பு நடைபெற்றது. சன்னிதானம், பெரிய நடை பந்தல் உள்ளிட்ட பகுதிகளில் படைப் பிரிவினர் ஊர்வலமாகச் சென்றனர். இதுகுறித்து சந்நிதானம் காவல் துறை சிறப்பு அதிகாரி கூறுகையில், இன்று (சனிக்கிழமை) இரவு வரை தீவிர கண்காணிப்பும், சோதனையும் தொடரும். பொதுவாக நடை சாத்தப்பட்ட பிறகு மாளிகைப்புரம், மணிமண்டபம், அன்னதான மண்டபம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பக்தர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

ஆனால் இன்று ஒருநாள் மட்டும் இரவு நடை சாத்தியபிறகு பதினெட்டாம்படிக்கு மேல் பகுதியின் எந்த இடத்திலும் பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பம்பையில் இருந்து வரும் பக்தர்கள் நடை பந்தல் மற்றும் வரிசையில் காத்திருக்கலாம். ஆனால் நாளை ஞாயிறு காலையிலேயே பதினெடடாம் படி ஏற அனுமதிக்கப்படுவர். திருமுற்றம் மற்றும் சன்னிதானத்தின் அனைத்து பகுதிகளிலும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு தொடர் கண்காணிப்பில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிலையில் சபரிமலையில் தினமும் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது. இதனால், பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் தங்களுக்கு தேவைப்படும் தரிசன தேதிகளை முன்பதிவு செய்து வருகின்றனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில் டிசம்பர் 27-ம் தேதி மண்டலபூஜை நடைபெற உள்ளது.அன்று ஐயப்பனுக்கு தங்க அங்கி அணிவிக்கப்பட்டு, சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இதற்கான மண்டல வழிபாடுகள் கடந்த 17-ம் தேதி தொடங்கின. தொடக்கத்தில், ஆன்லைன் மூலம் 70 ஆயிரம் பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில் 20 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்பட்டனர். ஆனால், இதை விட கூடுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டதால், கடும் நெரிசல் ஏற்பட்டது.


சபரிமலை: பாதுகாப்பு தீவிரம்! தரிசனத்தை எளிதாக்க தேவசம் போர்டின் அதிரடி முடிவு! பக்தர்கள் மகிழ்ச்சி!

நீதிமன்ற உத்தரவின்பேரில், ஸ்பாட் புக்கிங் 5 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இதனால், நெரிசல் படிப்படியாகக் குறைந்தது. இருப்பினும், தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவுகள் ஜனவரி 10-ம் தேதி வரை முடிந்துவிட்டன.இதனால், பயணத்தை முன்னதாக திட்டமிடாத பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எரிமேலி, நிலக்கல் உள்ளிட்ட இடங்களில் பல மணி நேரம் காத்திருந்து, ஸ்பாட் புக்கிங் செய்து தரிசனம் செய்யும் நிலை இவர்களுக்கு ஏற்பட்டது.

இந்நிலையில், சபரிமலையில் தேவசம் போர்டு மற்றும் போலீசார் சார்பில் பல்வேறு விதங்களிலும் கூட்ட மேலாண்மை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதையடுத்து, நெரிசல் குறைந்துள்ளது. எனவே, ஆன்லைன் மூலம் தினமும் 10 ஆயிரம் பக்தர்களை கூடுதலாக அனுமதிக்க தேவசம் போர்டு முடிவு செய்துள்ளது.இதற்காக, தேவசம் போர்டு இணையதளத்தில் இம்மாதம் 7-ம் தேதியிலிருந்து 25-ம் தேி வரையும், டிசம்பர் 30 முதல் ஜனவரி 10-ம் தேதி வரையும் புக்கிங் செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பக்தர்கள் பலரும் ஆர்வமுடன் புக்கிங் செய்து வருவதால், இம்மாத கடைசி தேதிகள் வரை நிறைவடைந்துவிட்டன. தேவசம் போர்டின் இந்த திடீர் சலுகையால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
ரெப்போ விகித உயர்வு! FD-யில் அதிக வட்டி லாபம்? முதலீட்டாளர்களுக்கு குட்நியூஸ்!
Nana Patekar: ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
ரஜினியின் காலா திரைப்பட வில்லன் நானே படேகர் திடீர் மரணம்..! அதிகாலையில் வீட்டில் நேர்ந்த சோகம்
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
25 Years of Modi: மக்கள் சேவையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த மோடி... இணையத்தில் குவியும் வாழ்த்து!
TN Weather News: தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை
தமிழ்நாட்டில் இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை வார்னிங் - சென்னை? வானிலை அறிக்கை

வீடியோ

GEM Veeramani : சிறுமிகளை சீரழித்த கொடூரன்.. முதல்முறையாக வெளியே வீரமணி! போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்
ஆசை காட்டிய பெண்! பேருந்தில் அசந்த முதியவர் ரூ.1 கோடி தங்கக் கட்டி அபேஸ்!
புடவையிலேயே மின்னல் வேகம்! வெறுங்காலில் 1600மீ ஓட்டம்! பிரமிக்க வைத்த தாய்
Congress MLA Abuse : எல்லை மீறிய காங். எம்.எல்.ஏ! ஓடும் பேருந்தில் அநாகரிகம்.. விளாசும் நெட்டிசன்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
“நான் சுமந்து வளர்த்தெடுத்த மெட்ரோ எனும் குழந்தை.. மக்கள் பயன்பாட்டுக்கு வருவதில் பெருமை” – மு.க ஸ்டாலின்
Sugarcane Farmers : கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
கரும்பு விவசாயிகள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு.! வங்கி கணக்கில் பணம் டெபாசிட்- தேதி குறித்த தமிழக அரசு
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
ஜிஎஸ்டி வசூல் குறைந்துள்ளதா?.. திமுகவினரின் பொய் பிரச்சாரம்.. பதிலடி கொடுத்த தவெக ஐடி விங்!
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Karthigai Deepam: ரிலீசான கார்த்திக்.. கடத்தப்பட்ட சந்திரகலா! கார்த்திகை தீபத்தில் இன்று?
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
Mahindra Offers: ரூபாய் 1.50 லட்சம் தள்ளுபடி... Scorpio முதல் Thar வரை.. நவராத்திரி சலுகையை அறிவித்தது மஹிந்திரா!
TN Govt: அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
அடடே..! வெற்றிப் பயணத்தால் ஆண்களுக்கும் பேருந்து கட்டணம் குறைப்பு - எவ்வளவு, எப்படி தெரியுமா?
TN Govt: சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
சொத்து விவரங்களை தராவிட்டால் பதவி உயர்வு இல்லை - அரசு ஊழியர்களுக்கு விஜய் அரசு அதிரடி உத்தரவு
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
முதன்முறையாக.. இந்தியாவில் வரும் 27ம் தேதி K Pop இசை நிகழ்ச்சி! எங்கே தெரியுமா?
Embed widget