Sabarimala : காத்திருந்த பக்தர்கள்... கதவை திறந்த தேவஸ்தானம்.. சபரிமலை கோயில் நடை இன்று திறப்பு!
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் ஆனி மாத பூஜைக்காக இன்று மாலை 6 மணிக்கு கோயில் நடை திறக்கப்படுகிறது.
பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. வைகாசி கடைசி நாள் திறக்கப்பட்டு ஆனி மாத பூஜை நடத்தப்படும். அந்தவகையில் சபரிமலையில் உள்ள ஐயப்பனை முன்பதிவு செய்த பக்தர்கள் அனைவரும் இன்று மாலை முதல் தரிசிக்கலாம் என்று கோயில் நிர்வாகமான திருவிதாங்கூர் தேவஸ்தானம் தகவல் தெரிவித்துள்ளது.
ஐயப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், வழக்கம்போல் இணையத்தள முன்பதிவு அடிப்படையில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பக்தர்களின் வசதிக்காக நிலக்கல் பகுதியில் உடனடி தரிசன முன்பதிவு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பூஜை நேரம்..?
சபரிமலை ஐயப்பன் கோயில் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு இன்று மாலை 5.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நாளை பிரதிஷ்டை தின சிறப்பு வழிபாடு, பூஜைகள் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில் நடைபெறுகிறது. பிறகு மீண்டும் இரவு 10.30 மணிக்கு நடை அடைக்கப்பட இருக்கிறது.
கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐய்யப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐய்யப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின் 5 நாட்களும் சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். மண்டல பூஜை, மகர விளக்கு பூஜை காலங்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருப்பதால், இந்த 5 நாட்களில் சபரிமலைக்கு பயணம் மேற்கொண்டு பக்தர்கள் சாமி தரிசனம் செய்வார்கள்.
மேலும் படிக்க : Jayam Ravi: கண்ணீர் சிந்திய ஜெயம் ரவி.. இறந்த ரசிகரின் குழந்தைக்கு படிப்பு செலவை ஏற்பதாக உறுதி..
இந்நிலையில், ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை (இன்று) 14 ஆம் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் கூறுகையில், ‘ஆனி மாத பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோயிலின் நடை வரும் 14ஆம் தேதி லை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் நடையை திறந்து வைப்பார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்