மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

சபரிமலையில் மண்டலகால வருமானம் கடந்தாண்டை விட எல்லா வகையிலும் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மொத்த வருமானம் ரூ.92 கோடி கிடைத்துள்ளது.

கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தையொட்டி மண்டல, மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை கோயிலில் நடை திறக்கப்படும். அதன்படி இந்த ஆண்டுக்கான மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை கடந்த 16ம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்ப சாமி கோயிலில் 41 நாட்கள் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஐயப்ப பக்தர்கள் விரதம் இருந்து, கருப்பு உடை அணிந்து இருமுடி கட்டி தலையில் சுமந்து பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய மணிக்கணக்கில் வரிசையில் நின்று சரண கோஷம் முழங்க 18 படி ஏறி ஐயப்பனை வழிபடுவர். 


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

இந்த நிலையில், கடந்த மாதம் நவம்பர் 16ம் தேதி மாலை முதல் சபரிமலையில் மண்டல காலம் துவங்கி நடந்து வருகிறது. தொடக்கத்தில் மூன்று நாட்கள் கட்டுக்கடங்கா கூட்டத்தால் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.  கூட்ட நெரிசல் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு நிலைமை சீரடைந்து சில நாட்களைத் தவிர்த்து மற்ற நாட்களில் அதிக கூட்டம் தொடர்ந்து காணப்படுகிறது.  குறிப்பாக ஸ்பாட் புக்கிங் எண்ணிக்கை 20 ஆயிரத்தில் இருந்து ஐந்தாயிரமாக குறைக்கப்பட்டதால் நீண்ட காத்திருப்பு மற்றும் நெரிசலும் குறைந்துள்ளது.

சபரிமலை சீசன் துவங்கிய 15 நாட்களில் வருமானம் ரூ.98 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டை விட இது 33.33 சதவீதம் அதிகம். கடந்த ஆண்டு இதே கால அளவில் ரூ.69 கோடியாக இருந்தது. அரவணை விற்பனையில் மட்டும் ரூ.47 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு ரூ.32 கோடியாக இருந்தது. 46.86 சதவீதம் அதிகரித்துள்ளது. அப்பம் விற்பனையில் ரூ.3.5 கோடி கிடைத்தது. இது கடந்த ஆண்டும் இதே அளவில் இருந்தது. காணிக்கையாக ரூ.26 கோடி கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு இது ரூ.22 கோடியாக இருந்தது. 18.18 சதவீதம் அதிகரித்துள்ளது.


சபரிமலை ஐயப்பன் கோயில் வருமானம் உச்சம்! பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு: அரவணை தட்டுப்பாடு வருமா?

15 நாட்களில் 12.47 லட்சம் பக்தர்கள் சபரிமலையேறி தரிசனம் செய்துள்ளனர். கடந்த ஆண்டை விட ஒரு லட்சம் பேர் அதிகம். மண்டல சீசன் துவங்கும் முன் 46 லட்சம் டின் அரவணை ஸ்டாக் செய்யப்பட்டிருந்தது. தற்போது இது 27 லட்சமாக குறைந்துள்ளது. சாதாரண நிலையில் வினியோகம் நடந்தால் அரவணைக்கு தட்டுப்பாடு ஏற்படாது என்று சபரிமலை செயல் அலுவலர் ஓ.ஜி.பிஜு கூறினார். கூட்டம் ஓரளவுக்கு கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் பக்தர்கள் அதிக அளவில் அரவணை வாங்குகின்றனர். கூட்டம் அதிகமாகி நீண்ட காத்திருப்பு இருக்கும்போது பிரசாதம் கூட வாங்க முடியாமல் பக்தர்கள் திரும்பி செல்வர்.

தற்போது இரண்டரை லட்சம் டின் அரவணை உற்பத்தி செய்யப்படுகிறது. இதை 3 லட்சமாக அதிகரித்தால் மட்டுமே தட்டுப்பாடு இல்லாமல் வழங்க முடியும் என்று கருதப்படுகிறது. இதற்கான ஆலோசனையும்  நடந்து வருகிறது. டிசம்பர் 5ம் தேதி திருவனந்தபுரத்தில் நடக்கும் தேவசம் போர்டு கூட்டத்துக்கு பின் அன்னதானத்தில் மதியம் பாயாசத்துடன் விருந்தளிப்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
ஓணம் பண்டிகை: சேலம் வழியாக கேரளாவுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு! தெரிந்துகொள்ளுங்கள் மக்களே!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: ஆவணி, ஓணம் தரிசனத்திற்கு பக்தர்கள் குவிந்தனர்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
ஆதார் கார்டு தொலைந்தாலும் கவலையில்லை! வாட்ஸ்அப்பில் நொடியில் டவுன்லோட் செய்யுங்கள்!
BJP: டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு
டீம் 2029..! மொத்தமாக கலைத்து போட்டு தேர்தலுக்கு தயாராகும் பாஜக..! யாருக்கு என்ன பொறுப்பு? இன்று வெளியீடு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget