மேலும் அறிய

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜை தொடங்கியது!

சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெறும் சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும்.

பிற கோயில்கள் போல ஐயப்பன் கோயில் அனைத்து நாட்களும் திறக்கப்படாது. கேரள மாநிலத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றவையாகும். இந்த கோயிலுக்குச் செல்ல மாலை அணிந்து கடுமையான விரதம் இருந்து மலையேறி பக்தர்கள் ஐயப்பன் சாமியை வழிபடுவார்கள். ஒவ்வொரு மாதத்தின்  5  நாட்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலின் நடை திறக்கப்படுவது வழக்கம். சபரிமலையில் ஐயப்பனுக்கு 41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் தங்க அங்கி அணிவிக்கப்பட்டு மண்டலபூஜை நடைபெறும். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சரண கோஷத்துடன் தரிசனம் செய்வார்கள்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜை தொடங்கியது!

மண்டல கால பூஜைகளுக்காக சபரிமலை நடை சரண கோஷங்கள் முழங்க திறக்கப்பட்டது. கார்த்திகை 1ம் தேதி முதல், 41 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெறும் பூஜை, சபரிமலையில் ஒரு மண்டல காலமாகும். இதற்காக, நேற்று மாலை, 5:00 மணிக்கு மேல் சாந்தி அருண்குமார் நம்பூதிரி நடை திறந்த போது, பக்தர்கள் சரண கோஷம் எழுப்பினர். தொடர்ந்து, கோயிலை வலம் வந்த மேல் சாந்தி, 18 படிகள் வழியாக வந்து ஆழி குண்டத்தில் நெருப்பு வளர்த்தார். பின், 18 படிகளுக்கு கீழே இருமுடி கட்டுடன் நின்று கொண்டிருந்த புதிய மேல் சாந்திகள், சபரிமலை பிரசாத் நம்பூதிரி , மாளிகைப்புறம் மனு நம்பூதிரியை கைப்பிடித்து அழைத்து வந்தார்.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜை தொடங்கியது!

ஐயப்பன் சன்னிதி முன்புறம் வந்ததும் அவர்களுக்கு திருநீறு பிரசாதமாக வழங்கப்பட்டது. புதிய மேல் சாந்தி மாலை, 6:30 மணிக்கு சன்னிதி முன் நடந்த சடங்கில், சபரிமலை புதிய மேல் சாந்தி பிரசாத் நம்பூதிரிக்கு, தந்திரி மகேஷ் மோகனரரு அபிஷேகம் நடத்தி சன்னிதிக்குள் அழைத்து சென்றார். இதுபோல, மாளிகைப்புறம் கோவில் முன்புறம் நடந்த சடங்கில், மனு நம்பூதிரிக்கு அபிஷேகம் நடத்தி கோவிலுக்குள் அழைத்துச் செல்லப்பட்டார். நேற்று வேறு விசேஷ பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. இரவு, 11:00 மணிக்கு நடை அடைக்கப்பட்டது. இன்று அதிகாலை, 3:00 மணிக்கு புதிய மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றியதும், இந்த ஆண்டுக்கான மண்டல காலம் துவங்கியது.


சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு: பக்தர்கள் சரண கோஷங்கள் முழங்க மண்டல பூஜை தொடங்கியது!

தொடர்ந்து, தந்திரி மகேஷ் மோகனரரு, அய்யப்பன் சிலையில் அபிஷேகம் நடத்திய பின், நெய்யபிஷேகத்தை துவங்கி வைத்தார். டிசம்பர் 27ம் தேதி  வரை எல்லா நாட்களிலும் அதிகாலை, 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 3:30 முதல், 11:30 மணி வரை நெய்யபிஷேகம் நடைபெறும். 3:30க்கு கணபதி ஹோமம், 7:30க்கு உஷ பூஜை, 12:00-க்கு களபாபிஷேகம், கலசாபிஷேகம், 12:-30க்கு உச்சபூஜை முடிந்து மதியம், 1:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆன்லைன் முன்பதிவு மீண்டும் மதியம், 3:00 மணிக்கு நடை திறக்கப்பட்டு மாலை, 6:30-க்கு தீபாராதனை, இரவு, 7:00 மணிக்கு புஷ்பாபிஷேகம், 9:30 மணிக்கு அத்தாழபூஜை நடைபெறும். 11:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தினமும் ஆன்லைன் முன்பதிவில், 70,000 பக்தர்களும், ஸ்பாட் புக்கிங்கில், 20,000 பக்தர்களும் அனுமதிக்கப்படுகின்றன.

தலைப்பு செய்திகள்

Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Independence Day 2026: சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் யார்? முதல் பட்ஜெட், தேர்தல் எப்போது நடந்தது? - சுவாரஸ்ய தகவல்கள் இதோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
கேரளாவா, ஜப்பானா? மின்னும் தரை.. முகமே பார்க்கலாம்! வியக்கவைத்த காசர்கோடு- வைரல் வீடியோ
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்துக்கு Wish பண்ணுங்க, மறக்காம Share செய்ங்க: பக்காவான 10 ட்ரெண்டிங் வாழ்த்துகள்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget