Video: ‘எல்லாரும் ஒன்னா இருங்கப்பா..’ - தந்தையுடன் கடைசியாக பேசிய மாணவர் நவீன்...!
ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலுக்கு மத்தியில் உணவிற்காக தனது பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த நவீன் கொல்லப்பட்டார்.
உக்ரைனின் கார்கிவில் நவீன் சேகரப்பா ஞானகவுடர் இறந்த செய்தி வெளியானதை அடுத்து, கர்நாடகாவில் உள்ள சலகேரியில் இருள் சூழ்ந்தது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறுவதற்காக ஏராளமானோர் நவீனின் வீட்டிற்கு திரண்டனர்.
ரஷ்யப் படைகளின் கடும் தாக்குதலுக்கு மத்தியில் பணத்தை பரிமாற்றம் செய்யவும், உணவை எடுத்து வரவும் தனது பதுங்கு குழியிலிருந்து வெளியே வந்த நவீன் கொல்லப்பட்டார்.
இதுகுறித்து கர்நாடக மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் டாக்டர் மனோஜ் ராஜன் கூறுகையில், நவீன் தாக்குதலில் உயிரிழந்தபோது, அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளார். தகவல்களின்படி, கார்கிவில் உள்ள மத்திய குவேயரில் உள்ள நிர்வாக கட்டிடம் ரஷ்யாவால் தாக்கப்பட்டது. அதே தாக்குதலில் நவீன் உயிரிழந்தார்.
இரண்டு நாட்களுக்கு முன்பு தான் நவீன் தனது தந்தையுடன் வீடியோ கால் மூலம் உரையாடினார். நவீன் தனது தந்தையுடன் பேசும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
உரையாடலின் போது நவீனின் தந்தை தனது மகனிடம் தன்னைக் கவனித்துக் கொள்ளுமாறும், அங்கேயே இருங்கள் என்றும் கூறியிருந்தார். இந்திய தூதரகம் மூலம் அவரை அழைத்து வருவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் தனது மகனிடம் தெரிவித்தார்.
यूक्रेन में हमले के दौरान जान गंवाने वाले नवीन ने दो दिन पहले ही वीडियो कॉल पर घर वालों से की थी बात@pratimamishra04 https://t.co/p8nVQWYM7F #Ukraine #Russia #War #America #NATO pic.twitter.com/52XUyMa8TW
— ABP News (@ABPNews) March 1, 2022
நவீன் உக்ரைனில் எம்பிபிஎஸ் படித்து வந்ததாகவும், நான்காம் ஆண்டு படித்து வருவதாகவும் நவீனின் ஒருங்கிணைப்பாளர் ஏபிபி நியூஸிடம் தெரிவித்தார். நவீன் கர்நாடகா மாநிலம் சலேகேரியில் வசிப்பவர். நேற்று, நவீனின் தந்தை ஞானகவுடர் பிடிஐயிடம், இந்திய தூதரகத்தில் இருந்து யாரும் கார்கிவில் சிக்கியுள்ள மாணவர்களை அணுகவில்லை என்று கூறினார்.
அம்மாநில முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஞானகவுடரை அழைத்து நவீனின் இழப்புக்கு வருத்தம் தெரிவித்தார். தனது மகனின் உடலை இந்தியாவுக்கு கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகவும் ஞானகவுடரிடம் உறுதியளித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்