மேலும் அறிய

"இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி.. மோடிதாங்க காரணம்" ரஷிய அதிபர் புதின் பாராட்டு!

உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் "மேக் இன் இந்தியா" திட்டம் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று ரஷிய அதிபர் புதின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

மாஸ்கோவில் நடைபெற்ற 15ஆவது விடிபி ரஷிய முதலீட்டு மாநாட்டில் பிரதமர் மோடியின் கொள்கை மற்றும் மேக் இன் இந்தியா திட்டம் ஆகியவற்றை ரஷிய அதிபர் புதின் பாராட்டினார். வளர்ச்சிக்கான நிலையான சூழலை உருவாக்க இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளை பாராட்டிய அதிபர் புதின், இந்தியாவின் வளர்ச்சிக்கு இந்தக் கொள்கைகள் எவ்வாறு பங்களித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டினார்.

உற்பத்தியை ஊக்குவிப்பது, அந்நிய முதலீட்டை ஈர்ப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட "மேக் இன் இந்தியா" திட்டம், உலகப் பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலையை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்று அவர் கூறினார்.

மோடியை பாராட்டி தள்ளிய ரஷிய அதிபர்: 

அதிபர் புதினின் கருத்து, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது. சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (எஸ்.எம்.இ) ஏற்ற "நிலையான சூழல்களை" உருவாக்குவதில் இந்திய அரசையும் அதன் முயற்சிகளையும் அவர் பாராட்டினார்.

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி முன்னெடுத்துள்ள பொருளாதார முன்முயற்சிகளை எடுத்துரைத்து, "மேக் இன் இந்தியா"  திட்டம் பற்றி சிறப்பாக பாராட்டினார். ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்திற்கும், இந்தியாவின் "மேக் இன் இந்தியா" திட்டத்திற்கும் இடையிலான ஒற்றுமைகளை அதிபர் புதின் விளக்கினார்.

இந்தியாவில் உற்பத்தி செயல்பாடுகளை நிறுவ வேண்டும் என்ற ரஷியாவின் விருப்பத்தை அவர் வெளிப்படுத்தினார். இந்தியாவில் செய்யப்படும் முதலீடுகள் லாபகரமானவை. இந்தியாவின் தலைமை தனது தேசிய நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் கவனம் செலுத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.

"இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது"

பிரதமர் மோடி "மேக் இன் இந்தியா" என்ற திட்டத்தை வைத்துள்ளார். இந்தியாவில் எங்கள் உற்பத்தி செயல்பாடுகளை மேற்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம். பிரதமரின் தலைமையின் கீழ், இந்தியாவை முதன்மைப்படுத்தும் கொள்கையால் உந்தப்பட்டு நிலையான சூழல்களை இந்திய அரசு உருவாக்கி வருகிறது. இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானது என்று நாங்கள் நம்புகிறோம்" என்று ரஷிய அதிபர் கூறினார்.

பிரிக்ஸ் அமைப்பின் பரிணாம வளர்ச்சியின் பின்னணியில் ரஷியாவின் இறக்குமதி மாற்று திட்டத்தின் முக்கியத்துவத்தையும் அதிபர் புதின் எடுத்துரைத்தார். சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் பிரிக்ஸ் + நாடுகளில் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான சுமூகமான வணிகப் பரிவர்த்தனைகளை எளிதாக்க விரைவான தகராறு தீர்வு வழிமுறையின் அவசியம் ஆகியவற்றை அவர் விளக்கினார்.

நுகர்வோர் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், உயர் தொழில்நுட்பம் மற்றும் விவசாயம் போன்ற துறைகளில் உள்ளூர் ரஷ்ய உற்பத்தியாளர்களின் வெற்றியைக் குறிப்பிட்டு, சந்தையில் இருந்து வெளியேறிய மேற்கத்திய வணிக முத்திரைப் பொருட்களுக்குப் பதிலாக புதிய ரஷ்ய பொருட்களின் எழுச்சியை அவர் சுட்டிக்காட்டினார்.

 

தலைப்பு செய்திகள்

World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Gen Z இளைஞர்களின் மாதாந்திர சம்பளம் எங்கே போகிறது தெரியுமா? அதிரவைக்கும் உண்மை!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!
Independence Day PM Modi Speech: நிறைய அணுமின் நிலையங்கள் அமைக்கணும்.. வேறு மாதிரி இந்தியா மாறணும்.. பிரதமர் மோடி பேச்சு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget