Rohini IAS Update: நீச்சல் அடிக்க விரும்பிய ரோஹினி ஐஏஎஸ்: விதிமீறியதாக விசாரணை!
கர்நாடக மாநித்தின் அதிரடி ஐஏஎஸ் என அழைக்கப்படும் ரோஹினி சிந்தூரி அரசுக்கு சொந்தமான குடியிருப்பில் விதிகளை மீறி நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது
ரோகிணி சிந்தூரி ஐஏஎஸ் விதிகளை மீறி அரசு இல்லத்தில் நீச்சல் குளம் கட்டியது விசாரணையில் தெரியவந்துள்ளது. கர்நாடகாவில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என பாரபட்சம் பார்க்காமல் தவறு செய்தால் தட்டிக்கேட்பதில் அஞ்சாதவர் என்ற பெயர் பெற்ற ரோகிணி சிந்தூரி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மற்றொரு பெண் ஐஏஎஸ் அதிகாரியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக மைசூரு ஆட்சியர் பொறுப்பில் இருந்து வேறு துறைக்கு மாற்றப்பட்டார்.
அடிக்கடி ஏதாவது சர்ச்சையில் சிக்கிக்கொண்டே இருப்பதில் பேரார்வம் கொண்ட இவர். மைசூர் துணை ஆணையரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் ரோஹினி சிந்தூரி அனுமதி பெறாமல் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடம் கட்டியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து கர்நாடக அரசு ஜூன் முதல் வாரத்தில் இதுதொடர்பான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தது. மைசூரு பிராந்திய ஆணையர் ஜி.சி.பிரகாஷ் இது குறித்த ஆய்வை மேற்கொண்டார். நீச்சள் குளம் கட்டுவது தொடர்பான ஆய்வு அறிக்கையில் ரோஹினி சிந்தூரி குளம் கட்டுவதற்கு தேவையான அனுமதியை பெறவில்லை என கூறியுள்ளார்.
மேலும் அந்த அறிக்கையில் சிந்தூரி பாரம்பரிய சொத்தான ஜல் சன்னிதியில் குளம் கட்டுவதற்கு முன்பு பாரம்பரிய துறையிடமிருந்தோ அல்லது அதிகாரம் பெற்ர பாரம்பரியக் குழுவினரிடம் இருந்தோ அனுமதி பெறவில்லை. இதன் மூலம் விதிமுறைகளை மீறி உள்ளார்.
2020 டிசம்பர் 30ஆம் தேதி கட்டுமானப் பணிகள் கட்ட உத்தரவிடப்பட்டது, தொடர்ந்து பிப்ரவரி 26ஆம் தேதி நிறைவடைந்ததாகவும் ஆய்வறிக்கை கண்டறிந்தது. இருப்பினும் மார்ச் 2ஆம் தேதி நடந்த நிர்மிதி கேந்திராவின் பொதுக்கூட்டத்தில் இந்ததிட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐஏஎஸ் அதிகாரிகள் தொடர்பான மேலும் பல செய்திகளுக்கு:
அரசு குடியிருப்பில் விதியை மீறி நீச்சல் குளம் கட்டிய ரோஹினி ஐஏஎஸ்https://t.co/AU349aOiJg
— ABP Nadu (@abpnadu) June 24, 2021
இறையன்பு அடுத்த அதிரடி.. வியந்துபோன அதிகாரிகள் | Iraianbu IAS requested to avoid luxury meals
— ABP Nadu (@abpnadu) June 10, 2021
வீடியோவை காண:https://t.co/jnZ5bPj2Er#IraianbuIAS #TamilNadu #CMMKStalin#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு pic.twitter.com/AFiQyl8ATi
அறிக்கை கொடுத்த இறையன்பு.. அதிரடி காட்டிய முதல்வர் | CM MK Stalin | Iraianbu IAS | TamilNadu
— ABP Nadu (@abpnadu) June 20, 2021
வீடியோவை காண:https://t.co/XPIhxEDtSr#CMMKStalin #IraianbuIAS #TamilNadu#ABPNadu #ABPNews #ஏபிபிநாடு pic.twitter.com/oNY7QNYTk4