Accident: அதிர்ச்சி.. பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து.. 30 மாணவர்களின் கதி என்ன..?
தெலங்கானாவில் 30 மாணவர்களுடன் சென்ற தனியார் பள்ளிப்பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தெலங்கானா மாநிலத்தில் அமைந்துள்ளது மகாபுதபத் மாவட்டம். இந்த மாவட்டத்தில் ஏராளமான தனியார் பள்ளிகள் இயங்கி வருகிறது. அவ்வாறு இயங்கி வரும் தனியார் பள்ளி ஒன்றில் மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வரவும், அவர்களை வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் பேருந்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பள்ளத்தில் கவிழ்ந்த பள்ளிப்பேருந்து:
இந்த நிலையில், அந்த பேருந்து தண்டல்பத்தி மண்டல் என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்தபோது பள்ளிப்பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் அருகே இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தின் பள்ளிப்பேருந்தின் உள்ளே 30 மாணவர்கள் இருந்தனர். பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்து இருப்பதை கண்ட அக்கம்பக்கத்தினரும், சாலையில் சென்று கொண்டிருந்த வாகன ஓட்டிகளும் பதறியடித்து பேருந்தில் சிக்கிய மாணவர்களை காப்பாற்ற ஓடினார்கள். அவர்கள் ஆம்புலன்சுக்கும், காவல்துறையினருக்கும் உடனடியாக தகவல் அளித்தனர்.
Several #Students had minor injuries, when a #SchoolBus carrying 30 students that lost control and overturned in #Danthalapally mandal of #Mahabubabad dist.
— Surya Reddy (@jsuryareddy) August 2, 2023
Students and Parents alleged, overspeed, reckless driving.#Telangana #RoadSafety #RoadAccident #SchoolBusAccident pic.twitter.com/tiKqLrZ2Wk
ஓட்டுநரின் அதிவேகம்:
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறை, மருத்துவ துறையினர் விபத்தில் சிக்கியவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் அனைவரும் சிறு காயங்களுடன் தப்பினர். இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை. இந்த பேருந்து விபத்தில் சுமார் 30 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த விபத்திற்கு ஓட்டுநரே காரணம் என்று மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஓட்டுநர் பேருந்தை அதிவேகமாக ஓட்டியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டதாக காயத்தில் சிக்கிய பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
விபத்தில் சிக்கிய பேருந்தும், விபத்துக்குள்ளான பேருந்தில் சிக்கிய மாணவர்களை பொதுமக்கள் காப்பாற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பள்ளிக்குழந்தைகளை ஏற்றிச்செல்லும் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களை ஓட்டும் ஓட்டுநர்கள் மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என்று பல முறை அறிவுறுத்தியும், சில ஓட்டுனர்கள் இதுபோன்று அதிவேகமாக செல்வதால் இதுபோன்ற விபத்துகள் அவ்வப்போது நிகழ்கிறது.
இந்த விபத்தில் சிக்கிய மாணவர்களுக்கு தக்க சிகிச்சை அளிக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.