DA Hike: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 42 சதவீதமாக உயர்வு - அரசு அதிரடி உத்தரவு
ராஜஸ்தானில் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநில அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1, 2023 முதல் அமலுக்கு வரும் என்று அரசாணை தெரிவிக்கப்பட்டுள்ளது. விலைவாசி உயர்வுக்கு ஏற்ப மத்திய அரசு ஊழியர்களுக்கும் ஓய்வூதியம் பெறுவோருக்கும் அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியது மத்திய அரசு. அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில அரசும் 4 சதவீத உயர்வினை இன்று (25.06.2023) அறிவித்துள்ளது.
ஊதிய உயர்வு
இந்த அறிவிப்பின் மூலம் மாநில அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படி 38 சதவீதத்திலிருந்து 42 சதவீதமாக ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது . இதன் மூலம் சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்களும், 4 லட்சத்து 40 ஆயிரம் ஓய்வூதியதாரர்கள் பயனடைய உள்ளனர் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பஞ்சாயத்து சமிதி மற்றும் ஜிலா பரிஷத் ஊழியர்களுக்கும் பயனடைவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உயர்வின் மூலம் மாநில அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ. 1,640 கோடி நிதிச்சுமை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாசிக்க..
TANCET 2023: ஏப்.15-க்குள் டான்செட் தேர்வு முடிவுகள்: அண்ணா பல்கலை. தகவல்
Kachchatheevu : ’கச்சத் தீவில் புத்தர் சிலை’ புனித அந்தோணியார் ஆலய விழாவை முடக்கும் முயற்சியா..?
CM Stalin : "போதைப்பொருள் ஒழிப்பில் அனைவரும் கைகோர்த்திடுவோம்” - முதலமைச்சர் ஸ்டாலின்