மேலும் அறிய

Railway : மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகையை ரத்து செய்ததன் மூலம் இவ்வளவு வருவாய் கிடைத்ததா? ஆர்டிஐ மூலம் தகவல்..!

கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை நிறுத்தப்பட்டது.

ரயில்களில் பயணிக்கும் மூத்த குடிமக்களுக்கு சில சலுகைகள் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி, மூத்த பெண் குடிமக்கள், 50 சதவிகித சலுகை விலையில் அனைத்து விதமான ரயில் வகுப்புகளில் பயணித்து வந்தனர். அதேபோல, மூத்த ஆண் குடிமக்களுக்கும் மாற்று பாலினத்தவருக்கும் 40 சதவிகித சலுகை விலையில் ரயில் டிக்கெட் வழங்கப்பட்டு வந்தது.

மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகை:

மூத்த குடிமக்களுக்கான சலுகையை பெற ஆண்களுக்கு 60 வயதும் பெண்களுக்கு 58 வயதும் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல், மூத்த குடிமக்களுக்கான சலுகை நிறுத்தப்பட்டது. கடந்த 2020ஆம் ஆண்டின் பெரும்பாலான காலக்கட்டத்தில் ரயில்கள் இயக்கப்படவில்லை.

அதேபோல, 2021ஆம் ஆண்டில் கூட, ரயில்கள் முழுவதுமாக இயக்கப்படவில்லை. இச்சூழலில், மூத்த குடிமக்களுக்கான ரயில் சலுகைகளை மீண்டும் அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. ஆனால், தற்போதுவரை, அது வழங்கப்படவில்லை.

இந்நிலையில், மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை ரத்து செய்ததன் மூலம் ரயில்வேவுக்கு 2,242 கோடி ரூபாய் கூடுதல் வருவாய் கிடைத்திருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி முதல் கடந்த 2022ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதி வரையில், ரயில்வே துறைக்கு 1,500 கோடி ரூபாய் கூடுதலாக கிடைத்துள்ளது.

சலுகை ரத்தால் இவ்வளவு வருவாயா?

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சந்திர சேகர் கவுர் என்பவர், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 2022ஆம் ஆண்டு, ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு, மார்ச் 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில், சுமார் 4.6 கோடி ஆண்கள், 3.3 கோடி பெண்கள் மற்றும் 18,000 திருநங்கைகள் உட்பட கிட்டத்தட்ட எட்டு கோடி மூத்த குடிமக்களுக்கு சலுகைகளை வழங்கவில்லை என்று ரயில்வே விளக்கம் அளித்துள்ளது.

இந்த காலகட்டத்தில், மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்ததன் மூலம் கூடுதலாக 2,242 கோடி ரூபாய் உள்பட மொத்த வருவாயாக 5,062 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இது, சலுகை நிறுத்தப்பட்டதன் மூலம் ஈட்டப்பட்டது.

மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்வதன் மூலம் கிடைக்கும் வருவாய் சீரான வேகத்தில் அதிகரித்துள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு, மார்ச் 20ஆம் தேதி முதல் 2022 மார்ச் 31ஆம் தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் 7.31 கோடி மூத்த குடிமக்களுக்கு ரயில்வே சலுகைகளை வழங்கவில்லை. 

இதில், 60 வயதுக்கு மேற்பட்ட 4.46 கோடி ஆண் பயணிகளும், 58 வயதுக்கு மேற்பட்ட 2.84 கோடி பெண் பயணிகளும், 8,310 திருநங்கைகளும் அடங்குவர். 2020-22 காலக்கட்டத்தில், மூத்த குடிமக்கள் ரயிலில் பயணம் செய்ததன் மூலம் மொத்த வருவாயாக 3,464 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. மூத்த குடிமக்களுக்கான சலுகைகளை வழங்கி இருக்கும் பட்சத்தில் கிடைக்கும் வருவாயை விட இது 1,500 கோடி ரூபாய் அதிகமாகும்.

2022-23 நிதியாண்டில், ஆண் மூத்த குடிமக்களிடமிருந்து 2,891 கோடி ரூபாயும், பெண் பயணிகளிடமிருந்து 2,169 கோடி ரூபாயும், திருநங்கைகளிடமிருந்து 1.03 கோடி ரூபாயும் ரயில்வே வருவாயாகத ஈட்டியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”உள்ள விட மாட்டோம்” கோயில் நிர்வாகம் பகீர்! இளையராஜா- ஜீயர் சர்ச்சைவிடாப்பிடியாக இருந்த பாஜக! சிக்கலில் ஏக்நாத் ஷிண்டே! மீண்டும் உடையும் சிவசேனா”யப்பா... 2 MATHS PERIOD! அமித்ஷாவின் ரியாக்‌ஷன்” மோடியை கலாய்த்த பிரியங்காவிஜய்க்காக மாஸ்டர் ப்ளான்! EPS போடும் கணக்கு! திமுக vs தவெக ட்விஸ்ட்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
’’தமிழகத்தைப் பின்தள்ளிய உ.பி. பெருந்துரோகம் இழைத்த திராவிட மாடல் அரசு’’- எழும் குற்றச்சாட்டு!
Aadhav Arjuna: தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
தவெக கட்சியில் இணைவீர்களா? - மறுக்காத ஆதவ் அர்ஜுனா .. பரபரப்பு பிரஸ்மீட் ..!
"முட்டாள்த்தனமா பேசாதீங்க.. இந்துக்களுக்கு அடி விழுது" பாஜகவை வறுத்தெடுத்த பிரியங்கா!
Embed widget