மேலும் அறிய

Whatsapp IRCTC : ரயில் பயணம் இனிமே இன்னும் ஜாலிதான்.. Whatsapp போதும்.. சாப்பாடு சீட் தேடி வரும்.. எல்லா தகவலும் இங்கே..

பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து சேட் செய்து உணவு ஆர்டர் செய்தால், அவர்களது PNR எண் உதவியுடன் இருக்கைகளுக்கே நேரடியாக உணவை டெலிவரி செய்யும் வகையில் இந்த சிறப்பான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரும் ரயில் சேவைகளில் ஒன்றாக இந்திய ரயில் சேவை விளங்குகிறது. நாள் ஒன்றுக்கு அலுவலகம் செல்வது முதல் நீண்ட தூரப் பயணம் வரை கிட்டத்தட்ட நாடு முழுவதும் 2 கோடியோ 50 லட்சம் மக்கள் இந்திய ரயில் சேவையைப் பயன்படுத்துகின்றனர்.

நாட்டின் அத்தியாவசியப் போக்குவரத்தாக விளங்கும் ரயில்களில் இருந்தபடி இனி எளிமையாக உணவு ஆர்டர் செய்யும் வசதியினை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது.

ஈஸியா உணவு ஆர்டர் செய்யலாம்!

இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்பரேஷன் (IRCTC) உணவு விநியோக சேவையான Zoop, Jio Hapik உடன் இணைந்து பயணிகளுக்கு ரயில்களில் உணவு விநியோக சேவைகளை எளிமைப்படுத்தி வழங்கவுள்ளது.

இந்த வாட்ஸ் அப் சாட்போட் (whatsapp chatbot) சேவையின் மூலம் பயணிகள் தங்கள் இருக்கைகளில் அமர்ந்தபடி, தங்கள் மொபைல் எண்ணில் இருந்து மிக எளிய முறையில் உணவு ஆர்டர் செய்யலாம்.

ரயில் பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து சேட் செய்து உணவு ஆர்டர் செய்தால், அவர்களது PNR எண் உதவியுடன் இருக்கைகளுக்கே நேரடியாக உணவை டெலிவரி செய்யும் வகையில் இந்த சிறப்பான வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக பயணிகள் கூடுதலாக எந்த  செயலியைப் பதிவிறக்கம் செய்யத் தேவையில்லை. பயணிகள் தங்கள் பயணத்தின் ஒரு பகுதியாக வரவிருக்கும் எந்த நிலையத்திலும் தங்கள் உணவை பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் சாட் செய்வது முதல்,  உணவைக் கண்காணித்து ட்ராக் செய்வது, ஆர்டர்கள் தொடர்பான உதவியைப் பெறுவது என அனைத்தையும் இந்த வாட்ஸப்போட் வசதி மூலம் பெறலாம்.

எப்படி உணவை ஆர்டர் செய்வது?

ஜூப் செயலியைத் தரவிறக்கம் செய்யாமலேயே, வாட்ஸ்அப் எண்ணான +91 7042062070 இல் ஜூப் உணவு விநியோக சேவை நிறுவனத்தை தொடர்பு கொள்ளலாம்.

உணவை ஆர்டர் செய்ய, பயணிகள் தங்கள் வாட்ஸ்அப் எண்ணைப் பயன்படுத்தி +91 7042062070 எனும் எண்ணில் Zoop WhatsApp சாட்போட்டுக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். மேலும் இந்த போட்டில் வழங்கப்பட்டுள்ள பிற சேவைகளையும் நீங்கள் பெறலாம்.

பயணங்களின்போது நெட் ஒர்க் பிரச்னைகள் தலைதூக்கும் நிலையில்,  WhatsApp chatbot மூலம் எளிதாக ஆர்டர்களை செய்து, அந்தந்த இருக்கைகளுக்கே உணவுகளைப் பெறலாம்.

உணவை ஆர்டர் செய்ய பயணிகள் தங்கள் PNR எண்ணைப் பயன்படுத்த வேண்டும். பிஎன் ஆர் எண்ணைக்கொண்டு பிற தகவல்கள் அனைத்தும் தெரியவருவதால், வரவிருக்கும் நிலையங்களை ஒட்டிய உணவகங்களில் தேவைக்கு ஏற்ப உணவை ஆர்டர் செய்யலாம்.

https://wa.me/917042062070 என்ற இணையதளம் சென்றும் உணவை ஆர்டர் செய்யலாம்.

பணம் செலுத்துதல்

Zoop Food Delivery App இன் அம்சம் UPI, நெட் பேங்கிங்,  போன்ற சேவைகளில் டிஜிட்டல் முறையில் வாடிக்கையாளர்கள் பணம் செலுத்தலாம், வாட்ஸப் பேமண்ட் இன்னும் வணிகப் பயன்பாட்டுக்கு வராத நிலையில், அதனைப் பயன்படுத்த முடியாது.


மேலும் வாசிக்க- Asia Cup 2022: விராட் கோலி இதை செய்தால் .. அனைவரும் வாயை மூடுவார்கள்.. முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி

மேலும் வாசிக்க- TN TRB Recruitment 2022: 1.80 லட்சம் வரை ஊதியம்; எஸ்சிஇஆர்டி விரிவுரையாளர் பதவிக்கு விண்ணப்பிப்பது எப்படி?- முழு விவரம்

தலைப்பு செய்திகள்

டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
டிவிஎஸ், ஹோண்டாவை ஓவர்டேக் செய்ததா ஹீரோ? ஜூலை மாத விற்பனை அறிக்கையில் வெளியான உண்மை!
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மிகப்பெரிய மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி மெகா கணக்கு... 
சென்னை - செங்கல்பட்டு - திண்டிவனம் ரூட்டில் வரப்போகும் மாற்றம்! ரூ.2.37 லட்சம் கோடி கணக்கு... 
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
புற்றுநோயாளிகளுக்கு கன்ஃபார்ம் ரயில் டிக்கெட்டுகள்.. பெறுவது எப்படி? - அமைச்சர் தகவல்!
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: “நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
“நான் சிங்கிள் மீனிங்கில் தான் பேசினேன், பயப்பட மாட்டேன், மீண்டும் பேசுவேன்“; உதயநிதி அதிரடி பேட்டி
CM Vijay : ’கைது செய்யப்பட்ட உதயநிதி – போராட்டத்தில் இறங்கிய திமுகவினர்’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
’கைது செய்யப்பட்ட உதயநிதி’ கூலாக ஆய்வுக் கூட்டம் நடத்திய முதல்வர் விஜய்..!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
CLAT: கிளாட் நுழைவுத் தேர்வுக்கான பதிவு தொடக்கம்: அக். 31 வரை விண்ணப்பிக்கலாம்; முழு விவரங்கள்
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Oppo A7 Pro Max: 10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
10,000mAh மெகா பேட்டரியுடன் தனது முதல் 5ஜி ஃபோனை வெயிட்டாக இறக்கிய ஓப்போ.! விலை, அம்சங்கள் என்ன.?
Trump Vs Pakistan: சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
சீன் போட்டு சுற்றிவந்த பாகிஸ்தான்; மூக்கை உடைத்துவிட்ட ட்ரம்ப்; பல்பு வாங்கிய ஷாபாஸ்-முனீன்.! நடந்தது என்ன.?
BYD Festive Offers India: ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
ஒன்னு ரெண்டு இல்ல, ஏகப்பட்ட ஆஃபர்.! பண்டிகைக்கால சலுகைகளை வாரி வழங்கும் BYD; ஐடியா இருந்தா முந்துங்க.!
Embed widget