Rahul Gandhi: "என்னோட பாட்டி, அப்பாவ கொன்னாங்க; ஆனாலும் அதை மட்டும் நான் செய்யல" - மோடிக்கு ராகுல் அட்வைஸ்!
எனது தந்தை, பாட்டி கொல்லப்பட்டாலும் யார் மீதும் நான், வெறுப்புணர்வை காட்டியதில்லை என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில், ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொண்டுள்ளார். தமிழகத்தில் தொடங்கிய இந்த பயணத்தின் 79வது நாளில், மத்திய பிரதேசத்தில் ராகுல் காந்தி தனது நடைபயணத்தை தொடங்கினார். அப்போது, சாலையின் இருபுறமும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்து, ராகுல் காந்திக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#WATCH | Congress MP Rahul Gandhi rides a motorbike during the 'Bharat Jodo Yatra' in Mhow, Madhya Pradesh. pic.twitter.com/TNG1yvwKbo
— ANI (@ANI) November 27, 2022
என்னிடம் வெறுப்பு இல்லை - ராகுல் காந்தி
தொடர்ந்து அம்பேத்கர் பிறந்த இடமான மோவ்வில் உள்ள அவரது உருவ சிலைக்கு, அவர் மரியாதை செலுத்தினர். பின்னர் அங்கு பேசிய ராகுல்காந்தி, “என் பாட்டி துப்பாக்கியால் சுடப்பட்டு 32 தோட்டாக்களை உடலில் வாங்கி உயிரிழந்தார். எனது தந்தையும் தீவிரவாத தாக்குதலில் கொல்லப்பட்டார். எனக்கு எதிராக பயங்கர வன்முறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. ஆனால் நான் பயத்தை இழந்துவிட்டேன். யாரிடமும் எனக்கு வெறுப்பு இல்லை. வெறுப்பு என்னை விட்டு விலகியபோது, என் இதயத்தில் அன்பு மட்டுமே மலர்ந்தது. வேறொன்றுமே இல்லை. இந்தியாவின் டிஎன்ஏ என்பது பயம் அல்லது வெறுப்பு ஆகியவற்றால் ஆனது அல்ல, அன்பையும் இரக்கத்தையும் மட்டுமே உள்ளடக்கியது” என்றார்.
பாஜகவினர் பயத்தை விட வேண்டும் - ராகுல் காந்தி
“வெறுப்பின் ஒரு துளி கூட என்னிடம் இல்லை. அதனை என்னுள் நான் வளர்க்கவும் இல்லை. அதனால் தான் பாஜக, பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் ஆர்எஸ்எஸ்காரர்களிடம் நான் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். உங்கள் இதயத்தில் உள்ள பயத்தை கைவிடுங்கள், வெறுப்பு மறைந்து விடும். உங்களது பயமே நாட்டில் வெறுப்பை உண்டாக்கி சேதத்தை ஏற்படுத்துகிறது. அன்பு உள்ளவர்கள் ஒரு போதும் பயப்பட மாட்டார்கள். அச்சம் கொண்டவர்களால் நேசிக்க முடியாது. இதுவே எனது பாதயாத்திரையின் செய்தியும் கூட” என ராகுல் காந்தி பேசினார்.
लोकतंत्र का संरक्षण - सर्वोच्च धर्म
— Rahul Gandhi (@RahulGandhi) November 26, 2022
एकता का विस्तार - प्रथम लक्ष्य
समानता और समावेशिता - परम कर्तव्य
इस प्रण की साक्षी बाबासाहेब अंबेडकर की यह जन्मभूमि है। उनके दिए संविधान और उसके मूल्यों की रक्षा मैं आखिरी सांस तक करूंगा। pic.twitter.com/z8yuMQiQ1U
அரசியலமைப்பை அழிக்க ஆர்எஸ்எஸ் சதி:
“அம்பேத்கர், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, சுபாஷ் சந்திர போஸ் உள்ளிட்ட பெரிய ஆளுமைகள் அரசியலமைப்பை வழங்கினர். நமது அரசியலமைப்பு அனைவருக்கும் சம உரிமைகளை வழங்கி உள்ளது. மாநிலங்களவை, நீதித்துறை மற்றும் நாட்டின் அதிகார அமைப்புகள், அரசியலமைப்பிலிருந்து தோன்றியவை. அரசியலமைப்பு என்பது வெறும் புத்தகம் அல்ல, ஒரு வாழும் சக்தி, ஒரு சிந்தனை. அந்த எண்ணத்தை ஆர்.எஸ்.எஸ் அழிக்க விரும்புகிறது. அவர்களால் அரசியல் அமைப்பு சட்டத்தை வெளிப்படையாக அழிக்க முடியாது, அதற்கான தைரியமும் கிடையாது. ஒருவேளை அவர்கள் முயற்சித்தாலும் நாடு அவர்களை தடுத்து நிறுத்தும். அதன் காரணமாகவே அரசியலமைப்புச் சட்டத்தை அழிக்க பின்கதவு வழியாக முயற்சிக்கும் ஆர்எஸ்எஸ், தனக்கான நபர்களை, முக்கிய அமைப்புகள், நீதித்துறை, ஊடகங்களில் ஈடுபடுத்தி வருகிறது” என ராகுல் காந்தி குற்றம்சாட்டினார்.