(Source: ECI/ABP News/ABP Majha)
பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை - பியூஷ் கோயல்
Piyush Goyal: முதலீட்டாளர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்
நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராவது ராகுல் காந்திக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மக்களவைத் தேர்தல் முடிவு குறித்தும் , கருத்து கணிப்புகள் குறித்தும் மற்றும் பங்குச் சந்தையின் தாக்கம் குறித்தும் பேசினார். அவர் பேசியதாவது,
"தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் பல முறைகேடுகள் நடைபெற்றுள்ளது. இதனால், பங்குச் சந்தையில் மிகப் பெரிய முறைகேடு நடைபெற்றது. இந்நிலையில் 38 லட்சம் கோடி ரூபாய் பங்குச் சந்தையில் இழப்பு ஏற்பட்டது. போலியான கருத்துக் கணிப்புகள் மூலம், இந்த இழப்புகள் ஏற்பட்டன.
போலியான கருத்துக் கணிப்புகளை நடத்தியவர்கள் விசாரிக்க வேண்டும் . கருத்துக் கணிப்புகளுக்கு பிறகுதான் பங்குச் சந்தைகள் உயர்ந்தன. பங்குச் சந்தை முறைகேடு குறித்து விசாரணை நடத்த விசாரணைக் குழு தேவை" என்றும் தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில், “தேர்தலின் போது, பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர், நிதியமைச்சர் ஆகியோர் பங்குச் சந்தை குறித்து கருத்து தெரிவித்ததை, இப்போதுதான் முதல்முறையாகக் பார்க்கிறேன். அப்போது, பங்குச் சந்தை அசுர வேகத்தில் உயர்ந்து வருகிறது என்று பிரதமர் கூறினார். ஜூன் 4 அன்று பங்குச் சந்தை உயரும், நீங்கள் அனைவரும் முதலீடு செய்ய வேண்டும் என்று நிதியமைச்சர் கூறினார். ஜூன் 4 ஆம் தேதிக்கு முன் பங்குகளை வாங்குங்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். சிலர் பணம் சம்பாதிக்க பிரதமர் மோடியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் உதவியுள்ளனர்.
மறுப்பு தெரிவித்த பியூஷ் கோயல்:
#WATCH | BJP leader Piyush Goyal says "In April and May, when the market was rising, foreigners sold in the market and Indian investors took advantage of it and bought it. The benefit of this rise in the last 2 months has been received by Indian investors. The day the exit poll… pic.twitter.com/SxyOFpMm2c
— ANI (@ANI) June 6, 2024
இந்நிலையில், ராகுல் காந்தியின் பேச்சுக்கு பியூஷ் கோயல் மறுப்பு தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்ததாவது, முதலீட்டாளார்களிடம் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேசியிருக்கிறார் என பாஜக மூத்த தலைவர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார் . மேலும் தெரிவிக்கையில், பங்குச்சந்தை தொடர்பாக ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.