மேலும் அறிய

Punjab Internet Ban: பஞ்சாபில் தொடரும் பதற்றம்; நாளை மதியம் வரை இணைய சேவை துண்டிப்பு - அம்ரித் பால் எங்கே?

பஞ்சாபில் செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிப்பு திங்கட்கிழமை நண்பகல் வரை 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் நலன் கருதி பஞ்சாபில் செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிப்பு திங்கட்கிழமை நண்பகல் வரை 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இணைய சேவை துண்டிப்பு:

பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குரல் அழைப்பு தவிர, அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் அனைத்து டாங்கிள் (dongle) சேவைகளும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் பிற சேவைகளும்  பிராந்திய அதிகார வரம்பில் பொது பாதுகாப்பு நலன் கருதி நாளை நண்பகல் 12:00 மணி நேரம் இடைநிறுத்தப்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சாபில் நடப்பது என்ன?

சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.

இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு

இதனிடையே, ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு அம்ரித் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் சிறப்பு போலீசார் விரட்டினர். ஆனால், போலீசாரின் பிடியில் சிக்காமல் அம்ரித் தப்பினர்.  இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 18ம் தேதியன்றே இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.

மாநிலத்தில் அமைதியை காக்க போலீசார் முழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் அரசு கேட்டு கொண்டுள்ளது. இதனிடையே, அம்ரித்தின் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, அம்ரித்தை தேடும் பணியும் மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று நண்பலுடன் முடியவிருந்து இணைய சேவை துண்டிப்பு, நாளை நண்பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget