![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Punjab Election Result 2022: ''ஆமா துடைச்சுட்டோம்''! அன்றே கணித்த ஆர்ச்சர்.?! தேடிச்சென்று பதில் அளித்த ஆம் ஆத்மி.!
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியமைக்க உள்ள ஆம் ஆத்மி, பிரபல கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் ஸ்வீப் என்ற டுவிட்டை டேக் செய்து ஆம் என்று பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
![Punjab Election Result 2022: ''ஆமா துடைச்சுட்டோம்''! அன்றே கணித்த ஆர்ச்சர்.?! தேடிச்சென்று பதில் அளித்த ஆம் ஆத்மி.! Punjab Election Result 2022 Aam Aadmi Party Retweets England Cricketer Jofra Archer Tweet After Historic Win Punjab Election Result 2022: ''ஆமா துடைச்சுட்டோம்''! அன்றே கணித்த ஆர்ச்சர்.?! தேடிச்சென்று பதில் அளித்த ஆம் ஆத்மி.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/10/62ea341f0cbd397d9f187229a1722da3_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாட்டில் உள்ள உத்தரபிரதேசம், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா மற்றும் பஞ்சாப் மாநிலங்களின் சட்டசபை தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகியது. அவற்றில் பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி முதன்முறையாக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஆம் ஆத்மியின் வெற்றியை நாட்டில் உள்ள பல தலைவர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
Sweep ?!
— Jofra Archer (@JofraArcher) February 20, 2022
இந்த நிலையில், இங்கிலாந்தைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஜோப்ரா ஆர்ச்சரின் டுவிட்டை ஆம் ஆத்மி கட்சி டேக் செய்து டுவிட் செய்திருப்பது பெரும் வைரலாகி வருகிறது. வேகப்பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி ( அன்றைய தினம்தான் பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல் நடைபெற்றது) தனது டுவிட்டர் பக்கத்தில் ஸ்வீப் என்ற வார்த்தையை பதிவிட்டுள்ளார்.
YES! 😎 #AAPSweepsPunjab https://t.co/MAD1Wxzca0
— AAP (@AamAadmiParty) March 10, 2022
தற்போது, பஞ்சாபில் ஆம் ஆத்மி மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஆம் ஆத்மி அந்த டுவிட்டை டேக் செய்து “ஆம்” என்று பதிவிட்டுள்ளது. ஸ்வீப் என்றால் துடைத்தல் என்று அர்த்தம். ஆம் ஆத்மி கட்சியின் சின்னமாக துடைப்பம் உள்ளது. இதனால், சுத்தமாக துடைத்துவிட்டோம் என்ற அர்த்தத்தில் ஆம் ஆத்மி ஸ்வீப் என்று டுவிட்டை டேக் செய்து பதிலளித்துள்ளனர்.
பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சி 90க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றி பெற்று, அந்த மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சியை அமைக்கிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)