மேலும் அறிய

Punjab CM Wedding: மருத்துவரை இன்று திருமணம் செய்யும் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான்

சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களான இவர்களது திருமணம் பாரம்பரிய சீக்கிய முறையில் குருத்வாராவில் நடைபெற உள்ளது.

பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் குர்ப்ரீத் சிங் என்னும் மருத்துவரை இன்று (ஜூலை.07) திருமணம் செய்ய உள்ளார்.

சீக்கிய முறையில் திருமணம்

48 வயதாகும் ஆம் ஆத்மி கட்சித் தலைவரும், பஞ்சாப் முதலமைச்சருமான பகவந்த் மானுக்கு இது இரண்டாவது திருமணம் ஆகும். இவர்களது திருமணம் பற்றிய தகவல் நேற்று தான் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சீக்கிய மதத்தைச் சேர்ந்தவர்களான இவர்களது திருமணம் பாரம்பரிய சீக்கிய முறையில் குருத்வாராவில் நடைபெற உள்ளது.

முன்னதாக 2019ஆம் ஆண்டு சட்டபேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பகவந்த் மான் மருத்துவர் குர்ப்ரீத் சிங்கை சந்தித்ததாகவும், கடந்த நான்கு ஆண்டுகளாக இவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆட்சியில் திருமணம் செய்யும் முதல் பஞ்சாப் முதல்வர்

இந்நிலையில், முதலைச்சரான பிறகு குர்ப்ரீத்தை திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்னும் தனது தாயின் கோரிக்கைக்கு இணங்க முதலமைச்சர் பகவந்த் மானுக்கு இன்று திருமணம் நடைபெறுகிறது.

இந்தத் திருமணத்தில் ஆம்ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்க உள்ளார். இவர் உள்பட சில தலைவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே திருமணத்தில் பங்கேற்க உள்ளனர். வேறு எவருக்கும் அனுமதி இல்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

முன்னதாக நடைபெற்ற பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற பெரும் வெற்றியை அடுத்து, கடந்த மார்ச் 16ஆம் தேதி பகவந்த் மான் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். ஆட்சியில்  இருக்கும்போது திருமணம் செய்து கொள்ளும் முதல் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முதல் திருமணம்

மருத்துவர் குர்ப்ரீத் சிங்கின் குடும்பமும் அரசியல் பின்பலம் கொண்டது எனக் கூறப்படும் நிலையில், அவரது தந்தை, அக்காக்கள் உள்ளிட்ட குடும்பத்தினர் வெளிநாட்டு குடியுரிமைப் பெற்றவர்கள் ஆவர்.

தனது முதல் மனைவி இந்தர் ப்ரீத் கவுருடன் பகவாந்த் மானுக்கு 2015ஆம் விவாகரத்து ஆன நிலையில், இவர்களது மகன் தில்ஷன் மான், 17 வயது, மகள் சீரத் கவுர் மான் 21 வயது, இருவரும் அமெரிக்காவில் தங்களது தாயுடன் வசித்து வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"சோலா பூரி ட்ரை பண்ணுங்க" அரசியலுக்கு ரெஸ்ட்.. ஓட்டலில் பேமிலியுடன் ரிலாக்ஸ் செய்த ராகுல் காந்தி!
Chennai Food Festival: வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
வெடிக்கும் சர்ச்சை: சென்னை உணவுத் திருவிழாவில் பீஃப் இருக்கா, இல்லையா?
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
Allu Arjun: அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கல்வீசி தாக்குதல் - 8 பேர் கைது!
"அப்பாயிண்ட்மெண்ட் லெட்டர் ரெடி.. வந்து வாங்கிட்டு போங்க" மோடி கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
மேலும் ஒரு சர்வதேச அங்கீகாரம்.. பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது!
Syria War: கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
கொல்லப்பட்ட 3.5 லட்ச மக்கள் ; சிரியாவில் என்ன நடக்கிறது, யார் காரணம் ? தற்போதைய நிலை என்ன?
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
TN Rain: திரும்பி வரும் காற்றழுத்தத்தால் ட்விஸ்ட்: நாளை மறுநாள் கனமழை இருக்கும் .!
CM Stalin: நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.!  அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
நாங்க எதிர்கொள்ளாத எதிரிகளே இல்லை.! அனல்பறந்த முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.!
Embed widget