மேலும் அறிய

மக்கள் நல பணியாளர்கள் திட்டம் தொடர வேண்டும் - உச்சநீதிமன்றம் தீர்ப்பு..

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

மாதம் 7, 500 சம்பளத்தில் வேலையிழந்த மக்கள் நல பணியாளர்களை வேலையில் அமர்த்திய தமிழக அரசின் திட்டத்திற்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டம் போல் இந்த திட்டமும் தொடர வேண்டும் என உச்ச நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மக்கள் நலப் பணியாளர்களை மீண்டும் பணியில் அமர்த்திய தமிழ்நாடு அரசின் நடவடிக்கைக்கு உச்சநீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

1989-ம் ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் பணியமர்த்தப்பட்ட மக்கள் நலப் பணியாளர்களை 1991-ல் அதிமுக அரசு பணி நீக்கம் செய்தது. பின்னர் திமுக ஆட்சிக்கு வந்தபோதெல்லாம் மக்கள் நலப் பணியாளர்கள் நியமிக்கப்படுவதும், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதும் தொடர்ந்தது. இறுதியாக 2011-ம் ஆண்டு 13 ஆயிரத்து 500 மக்கள் நலப் பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் அவர்கள் அனைவருக்கும் மீண்டும் பணி வழங்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அப்போதைய அதிமுக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட்டு, தீர்ப்பு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே மக்கள் நலப்பணியாளர்களுக்கு மாதம் 7 ஆயிரத்து 500 ரூபாய் ஊதியத்தில் மீண்டும் பணி வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபையில் அறிவித்தார். மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஒருங்கிணைப்பாளர்களாக அவர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றும் முதலமைச்சர் தெரிவித்தார்.

இதனை பெரும்பாலான மக்கள் நலப் பணியாளர்கள் ஏற்றுக்கொண்ட நிலையில், விழுப்புரம் மாவட்ட மக்கள் நலப் பணியாளர்கள் சங்கம் இதனை ஏற்க மறுத்து உச்ச நீதிமன்றம் சென்றது. இந்த வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வு, மக்கள் நலப் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு பணி வழங்கியதையும் உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள்து. ஆட்சிகள் மாறினாலும் மக்கள் நலப் பணியாளர் நியமனம் தொடர வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தலைப்பு செய்திகள்

எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
எப்படியெல்லாம் வளர்த்திருப்பாரு.. அப்பா இறப்புக்கு வராத மகள்கள்.. விளாசிய நெட்டிசன்கள்!
Supreme Court: வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
வீணாய் போன 22 ஆண்டுகள்..! காது கொடுக்காத நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றம் அதிருப்தி
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
இண்டிகோ 20வது ஆண்டு: 20,000 இலவச டிக்கெட் - அதிர்ஷ்டசாலி நீங்களா?
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..
எல்பிஜி தட்டுப்பாடு: எரிவாயு சேமிப்புக்கு சிலிண்டரில் ரூ.18 கூடுதல் கட்டணமா?விபரம் இதோ..

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget